குலுகுலு இயக்குனருடன் கூலாக போஸ் கொடுத்த லோகேஷ் கனகராஜ் - போட்டோவுடன் வந்த தளபதி 67 அப்டேட்

Published : Aug 15, 2022, 03:22 PM IST
குலுகுலு இயக்குனருடன் கூலாக போஸ் கொடுத்த லோகேஷ் கனகராஜ் - போட்டோவுடன் வந்த தளபதி 67 அப்டேட்

சுருக்கம்

Thalapathy 67 : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரத்னகுமார், அதில் தளபதி 67 படத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ளதையும் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

மேயாத மான் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் இயக்கிய படம் ஆடை. இப்படத்தில் நடிகை அமலாபால் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து படம் இயக்காமல் இருந்த ரத்னகுமார், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு வசனகர்த்தாவாக இணைந்தார்.

அதன்படி லோகேஷ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களுக்கு ரத்னா தான் வசனகர்த்தாவாக பணியாற்றினார். இதையடுத்து சந்தானத்துடன் இணைந்து அவர் நடித்த குலுகுலு படத்தை இயக்கினார் ரத்னா. கடந்த மாத இறுதியில் ரிலீசான இப்படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வியை தழுவியது.

இதையும் படியுங்கள்... நாட்டை மட்டுமே நேசிக்கிறேன்... அரசாங்கத்தை அல்ல - சுதந்திர தின வாழ்த்து சொல்லி மோடி அரசை சாடிய பி.சி.ஸ்ரீராம்

இந்நிலையில், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரத்னகுமார், அதில் தளபதி 67 படத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ளதையும் சூசகமாக குறிப்பிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அவரும், இயக்குனர் ரத்னகுமாரும் விஜய் படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதன்மூலம் இயக்குனர் லோகேஷ் உடன் ஹாட்ரிக் கூட்டணி அமைத்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார் ரத்னகுமார். தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க உள்ளதாகவும், இதில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்...  நடிகர் பாபி சிம்ஹாவின் 'தடை உடை' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மருமகன் மீது கொலை முயற்சி புகார்: 'கார்த்திகை தீபம் சீரியல் கார்த்திக் அதிரடி கைது!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: வெடித்த உண்மை! மாமனாரின் தலையில் போட அண்டாவை தூக்கிய சரவணன்!