நடிகர் பாபி சிம்ஹாவின் 'தடை உடை' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

By manimegalai a  |  First Published Aug 15, 2022, 2:47 PM IST

நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் 'தடை உடை' படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான 'தடை உடை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும்,  நடிகை ரோகிணி, ஏற்கனவே தன்னுடைய காட்சிகளை முடித்து விட்ட நிலையில், விரைவில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: ஹனி மூன் சென்ற இடத்தில் பிரச்சனையா? சோகமாக அமர்ந்திருக்கும் நயன்தாராவின் ஷாக்கிங் புகைப்படம்!

அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'தடை உடை'. இதில் நடிகர் பாபி சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நரங்க் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் பிரபு, செந்தில், நடிகை ரோகிணி, மணிகண்ட பிரபு, சரத் ரவி, ‘பழைய ஜோக்’ தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹதீஃப் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரேஷ்மி சிம்ஹா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

மேலும் செய்திகள்: விஜய் சென்ற அதே இடத்தை தேர்வு செய்த அஜித்... அடுத்து எங்கே செல்கிறது AK 61 படக்குழு? வெளியான சூப்பர் அப்டேட்!
 

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முழுமையாக நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து பாபி சிம்ஹா கைவசம் வசந்த முல்லை என்கிற தமிழ் படத்திலும், வால்டர் வீரய்யா என்கிற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்து.

click me!