வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்புடன் பணியாற்றி வருகிறார் விஜய். அவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. பிரபல தெலுங்கு இயக்குனரும், தமிழில் தோழா படத்தை இயக்கியவருமான வம்சி தான் இப்படத்தை இயக்குகிறார்.
வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை. இதேபோல் பிரபு, பிரகாஷ் ராஜ், ஷியாம், சரத்குமார், சம்யுக்தா, குஷ்பு, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. தில் ராஜு தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இதையும் படியுங்கள்... ஹனி மூன் சென்ற இடத்தில் பிரச்சனையா? சோகமாக அமர்ந்திருக்கும் நயன்தாராவின் ஷாக்கிங் புகைப்படம்!
Exclusive .❤️ pic.twitter.com/e7pBHYIBdC
— Varisu Trends (@Varisu_Offl)வாரிசு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்திலும் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் ஆப் டிசைனராக நடித்து வரும் இப்படத்தை வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது மருத்துவமனை ஒன்றில் வாரிசு படத்தின் ஷூட்டிங் நடைபெற்றபோது எடுத்த வீடியோ காட்சி கசிந்துள்ளது. அதில் நடிகர் விஜய் மற்றும் பிரபு ஆகியோர் உயிருக்கு போராடும் ஒருவரை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து பதறியபடி தள்ளிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... இன்னும் ஒரு வருஷமா! பிரபாஸின் ‘சலார்’ படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த KGF இயக்குனர்... ஷாக்கான ரசிகர்கள்