கடந்த மாதம், ஜூன் 3 ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படத்தின் சென்னை வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படங்களை இயக்கி, மிக குறுகிய நாட்களில் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள, இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரித்து நடித்திருந்த திரைப்படம் 'விக்ரம்'. போதை மருந்து கடத்தலை மையமாக வைத்து, விறுவிறுப்பாகவும், பரபரப்பான திரைக்கதையோடும், வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது.
சுமார் 125 கோடி முதல் 150 கோடி வரையிலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது, உலக அளவில் 400 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது. ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க பல வருடங்களாக காத்திருந்த கமல்ஹாசனுக்கு இப்படம் வெற்றிப்படமாக மட்டும் இல்லாமல், தயாரிப்பாளராகவும் சிறந்த படத்தை தயாரித்தவர் என்கிற பெயரை பெற்று தந்துள்ளது. தற்போது 'விக்ரம்' திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ப்ளஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் நிலையிலும், சில திரையரங்குகளில் 'விக்ரம்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.
மேலும் செய்திகள்: உள்ளாடை தெரியும் ட்ரான்ஸ்பரென்ட் உடையில்... ஒய்யார கவர்ச்சி காட்டும் பூஜா ஹெக்டே!! ரீசென்ட் போட்டோஸ்!
இப்படி ஒரு வெற்றி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜிக்கு ஒரு தயாரிப்பாளராக, நடிகர் கமல் ஹாசன் லக்ஸஸ் சொகுசு காரை பரிசாக வழங்கினார். மேலும் இந்த படத்திற்கு கடைசிவரை உறுதுணையாக இருந்த துணை இயக்குனர்கள் 10 பேருக்கு, பைக்கை பரிசாக கொடுத்தார், அதே போல் சிறப்பு வேடத்தில் நடித்த சூர்யாவுக்கு விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் மற்றும் இந்த படத்தை விநியோகம் செய்த உதயநிதிக்கு சிறப்பு பரிசுகளையும் கொடுத்து கௌரவித்தார். வெற்றி படம் கொடுத்த உட்சாகத்தில் இருக்கும் கமல் அடுத்த தரமான படத்தை கொடுக்க கதை கேட்டு வருவதோடு தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: மது பார்ட்டியில் மனைவி - மகளுடன் கலந்து கொண்டாரா அஜித்? விமர்சனத்திற்கு ஆளான புகைப்படம்..!
சமீபத்தில் 'விக்ரம்' படத்தின் வசூல் நிலவரம் குறித்து வெளியான தகவலில், தமிழகத்தில் ரூ.172 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் மட்டும் 'விக்ரம்' திரைப்படம் 17 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து எவ்வித அதிகார பூர்வ அறிவிப்பும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியாகவில்லை. மேலும் தற்போது வரை ரூபாய் 442 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் 450 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: இயக்குனர் அமீரை சோகத்தில் ஆழ்த்திய இழப்பு..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!