மிக்ஜாம் புயலினால் சென்னையை சுற்றி உள்ள பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கு கமல்ஹாசன் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள மிக்ஜாம் புயலினால் சென்னை, காஞ்சிபுரம், மாமல்லபுரம் போன்ற கடலோர பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்ய துவங்கிய மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பெரும்பாலான வீடுகளில் வெல்ல நீர் உள்ளே புகுந்துள்ளது. அபார்ட்மெண்டில் வசிப்பவர்களின் வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளதால்... உணவு மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட பலர் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் உணவு தேவை படுபவர்கள் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் தொடர்பு கொள்ளும்மாறு சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். அதே போல் அரசு உதவி தேவைப்படுபவர்களுக்கு செல் போனின் தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளது. தண்ணீர் புகுந்த வீட்டிற்குள் வசிக்கும் மக்கள் பத்திரமாக போட் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
undefined
மக்களை இந்த இயற்க்கை சீற்றத்தில் இருந்து மீட்டு கொண்டுவரும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஒரு பக்கம் தீயாக வேலை செய்து வருகிறார்கள். அதே போல் புயலின் தாக்கத்தால் கீழே சரிந்த மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக நாயகனும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில்... முக்கிய பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
இந்த பதிவில் ஏற்பட்டுள்ள "இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம். #CycloneMichuang புயல் ஏற்படுத்திய கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும்படி மக்கள் நீதி மய்யம் உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம். …
— Kamal Haasan (@ikamalhaasan)