நடிகர் ரோபோ சங்கர் வெள்ளத்தில் சிக்கி காயமடைந்ததாக காலில் ரத்தத்துடன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக மழை விடாது பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இந்த சூழலில் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் வீட்டில் தத்தளித்து வருகின்றனர். இந்த வெள்ளத்தால் சினிமா பிரபலங்களும் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர்.
நடிகர் ரோபோ சங்கர் தான் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு சென்றபோது வெள்ளத்தில் சிக்கி காயமடைந்ததாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். நடிகர் ரோபோ சங்கரின் வீடு சென்னை வளசரவாக்கத்தில் அமைந்துள்ளது. அவரின் வீட்டின் முன்பும் மழைநீர் குளம்போல் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வீட்டுக்கு தேவையான பால் மற்றும் மளிகை பொருட்கள் வாங்க இன்று காலை கடைக்கு சென்றுள்ளார் ரோபோ சங்கர். அப்போது பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பும்போது தகரம் ஒன்று நீரில் மிதந்துகொண்டிருந்ததை பார்த்த அவர், அதனை அப்புறப்படுத்த முயன்றுள்ளார். அப்போது அந்த தகரம் ரோபோ சங்கரின் காலில் கீச்சு காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.
பின்னர் ஒரு வழியாக மழை நீரில் இருந்து அந்த தகரத்தை அப்புறப்படுத்தி தன் வீட்டின் முன் போட்ட அவர், நடந்ததை கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். அதில் அனைவரும் மளிகை ஜாமான்கள் வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திய அவர், பாலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் அந்த வீடியோவில் ஃபீல் பண்ணி பேசி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வளசரவாக்கம் பகுதியில் இரும்பு தகரத்தை பாதுகாப்புடன் அப்புறப்படுத்த சென்றபோது காயமடைந்த நடிகர் ரோபோ சங்கர் pic.twitter.com/5ToN42tMgK
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இதையும் படியுங்கள்... 2015 வெள்ளத்தைவிட பெரும்பாதிப்பை ஏற்படுத்தியதா மிக்ஜாம் புயல்...? வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம்