
உலகமே தொழில்நுட்ப வளர்ச்சியால்.. அதி நவீனமாக மாறி வந்தாலும், சில மூட நம்பிக்கைகள் பல இடங்களில் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இது முற்றிலும் தவறான விஷயம் என பல விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டாலும்... சிலர் தொடர்ந்து இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு கொண்டிருப்பதை பல சமயங்களில் செய்திகள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.
மேலும் இது போன்ற சம்பவங்கள் திரைப்படங்களிலும் அதிகம் காட்டப்படுகிறது. இந்நிலையில் இதுபோன்ற ஒரு கொடூரமான வீடியோ தான், தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது உண்மையா? அல்லது திரைப்பட ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட செட்டப்பா என்பது தெரிவியவில்லை.
இரண்டு இளைஞர்களின் தலை துண்டாக வெட்டப்பட்டு பூஜையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த தலைகளின் பக்கத்திலேயே இருவரது சடலமும் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடக்கிறது. காளி வேடத்தில் ஒருவர் கையில் கத்தியோடு ஆடிக்கொண்டிருக்க, ஆசாமியார் ஒருவர் பூஜை செய்கிறார். இதனை பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானதை தொடர்ந்து நடிகர் பார்த்திபன் உச்சகட்ட அதிர்ச்சியில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில், "இது என்ன வென யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள். நானும் போலீஸுக்கு தெரியப்படுத்தியுள்ளேன்". என கூறியுள்ளார். இதை தொடர்ந்து பலர் அறிவியல் வளர்ந்தாலும் இந்த மூட நம்பிக்கைகள் அழிந்தபாடு இல்லை. ஒருவேளை இது உண்மையாக இருந்தால்... அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.