கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் பலிக்கும்.. விஜயகாந்த் நலம்பெற நடிகர் சூர்யா விருப்பம்..

Published : Dec 03, 2023, 09:43 PM IST
கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் பலிக்கும்.. விஜயகாந்த் நலம்பெற நடிகர் சூர்யா விருப்பம்..

சுருக்கம்

“அண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்" என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

“விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். இன்னும் இரண்டு நாளில் உங்களுக்கு நல்ல செய்தி வரும். வெகு விரைவில் விஜயகாந்த் வீடு திரும்ப இருக்கிறார். நிச்சயம் வந்து அனைவரையும் சந்திக்க இருக்கிறார்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், “2 தினங்களுக்கு முன்பு நான் இதே போன்று வீடியோ ஒன்றை வெளியிட்டேன். விஜயகாந்த் நலமுடன் உள்ளார். வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என அதில் கேட்டுக்கொண்டேன்.

ஆனாலும், தொடர்ந்து, ட்ரக்யாஸ்டமி செய்யப்பட்டதாகவும், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டதாகவும், செயற்கை சுவாசம் தரப்படுவதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்தை சந்தித்து, எனக்கு ஆறுதல் கூறியதாகவும் தொடர்ந்து பொய்யான தகவல்களை யூடியூப் சேனல்களும், சேனல்களும் பரப்பி வருகின்றன.

இந்த வதந்திகள் ஒட்டுமொத்தமாக கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், எங்கள் குடும்பத்தார், உறவினர்கள், திரையுலகினர் என பலரையும் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன. இங்கே நாங்கள் விஜயகாந்துடன் அமைதியாக மருத்துவமனையில் இருக்கிறோம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆனால், இந்த பரபரப்பும் வதந்தியும் வெளியில் உலாவி வருகிறது. மனிதநேயத்துடன் தயவு செய்து வதந்திகளை பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள். விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். இன்னும் இரண்டு நாளில் உங்களுக்கு நல்ல செய்தி வரும். வெகுவிரைவில் விஜயகாந்த் வீடு திரும்ப இருக்கிறார்.

நிச்சயம் வந்து அனைவரையும் சந்திக்க இருக்கிறார். வீண் வதந்திகளையும், பரபரப்புகளையும் யாரும் நம்பாதீர்கள். இன்று நானும் எனது இரண்டாவது மகன் சண்முக பாண்டியனும் விஜயகாந்தை சந்தித்த புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறோம். யாரும் வதந்திகளையும், பொய்செய்திகளையும் நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா எக்ஸ்-ல் வெளியிட்டுள்ள பதிவில், “அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.! கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி,  நலம் பெற வைக்கும்.!!” என்று பதிவிட்டுள்ளார்.

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சந்திரகலா மீது கொலை முயற்சி; கைது செய்யப்படும் சீரியல் நடிகர் கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்: அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வியை கொடுத்த படம்!