கண்களை குளமாக்கும் காட்சிகளுடன் வெளியானது கீர்த்தி பாண்டியனின் ‘கண்ணகி’ பட டிரைலர்

Published : Dec 03, 2023, 02:38 PM IST
கண்களை குளமாக்கும் காட்சிகளுடன் வெளியானது கீர்த்தி பாண்டியனின் ‘கண்ணகி’ பட டிரைலர்

சுருக்கம்

அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் சோயா ஆகிய நான்கு நாயகிகள் நடித்துள்ள கண்ணகி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதுவரை தும்பா, அன்பிற்கினியாள் போன்ற படங்களில் நடித்த இவர், அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் தான் கண்ணகி. இப்படத்தை யஷ்வந்த் கிஷோர் என்பவர் இயக்கி இருக்கிறார். 

இப்படத்தில் கீர்த்தி பாண்டியன் உடன் மயில்சாமி, அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, இளம் நடிகர் சாருஹாசன் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். கலை, நேத்ரா, நதி மற்றும் கீதா ஆகிய நான்கு பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் யஷ்வந்த் கிஷோர். திருமணம், விவாகரத்து, லிவ்விங் ரிலேஷன்ஷிப் ஆகியவற்றை பற்றி ஒரு ஆழமான கருத்தை சொல்லும் படமாக இது தயாராகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கண்ணகி திரைப்படத்தில் நடிகை கீர்த்தி பாண்டியன் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் வெளியிட்டு உள்ளனர். கனமான கதைக்களத்துடன் இப்படம் உருவாகி உள்ளது டிரைலரிலேயே தெரிகிறது.

இப்படத்தில் முதன்மை கேரக்டரில் நடித்துள்ள கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா ஆகியோரின் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. குறிப்பாக இந்த டிரைலரின் கடைசி காட்சியில் கர்ப்பிணியாக நடித்துள்ள கீர்த்தி பாண்டியன் தன் வயிற்றில் உள்ள குழந்தையை அடிப்பது போன்ற காட்சி கண்களை குளமாக்குகிறது. இந்த டிரைலரைப் போல் படமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 15-ந் தேதி ரிலீசாகிறது.

இதையும் படியுங்கள்... ஜெயலலிதா தான் உண்மையான ‘நீலாம்பரி’யா? படையப்பா படத்தின் டாப் சீக்ரெட்டை டக்குனு போட்டுடைத்த KS ரவிக்குமார்

PREV
click me!

Recommended Stories

கேசரி தான்... கேசரியே தான்..! ஜனநாயகன் ட்ரெய்லரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா?
திரும்பிப் போற ஐடியாவே இல்ல... I am Coming - அரசியல் டயலாக்குகள் உடன் அனல்பறக்கும் ஜனநாயகன் ட்ரெய்லர்..!