தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசித்ததற்கு நன்றி... விக்ரம் படத்தின் 100-வது நாளில் கமல் நெகிழ்ச்சி

By Ganesh AFirst Published Sep 10, 2022, 3:26 PM IST
Highlights

Kamalhaasan : ரிலீசானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் விக்ரம் திரைப்படம் இன்று வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. 

நடிகர் கமல்ஹாசன் நடித்து தயாரித்த திரைப்படம் விக்ரம். மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 4-வது படம் இதுவாகும். இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, செம்பன் வினோத், பகத் பாசில், காயத்ரி, சுவதிஸ்டா, ஷிவானி, மகேஸ்வரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்தார். பிலோமின் ராஜ் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்திருந்தார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் தமிழகத்தில் வெளியிட்டது. கடந்த ஜூன் மாதம் இப்படத்தை பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்தனர்.

இதையும் படியுங்கள்... அதிர்ச்சி.. 20 மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன் மகள்! என்ன ஆச்சு? அவரே கூறிய தகவல்!

ரிலீசானது முதல் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் இன்று வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. அதுமட்டுமின்றி இப்படம் 500 கோடிக்கு மேல் வசூலித்தும் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் அதிக வசூல் ஈட்டிய படமாக விக்ரம் மாறியுள்ளது. இதன் 100 நாளை ஒட்டி நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில், அவர் பேசியுள்ளதாவது : ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் நூறாவது நாளை எட்டி இருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். தலைமுறைகளைத் தாண்டி, என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக்கொள்கிறேன். விக்ரம் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். தம்பி லோகேஷுக்கு என் அன்பும், வாழ்த்தும்” என நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார் கமல்.

pic.twitter.com/7SjZIpTB6M

— Kamal Haasan (@ikamalhaasan)

இதையும் படியுங்கள்... 20 ஆண்டுகளில் 25 படங்களில் மட்டுமே நடித்தது ஏன்? - பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சீக்ரெட்டை சொன்ன ஜெயம் ரவி

click me!