“நீங்க இத கத்துக்கிட்டாலே போதும்”...மகளிர் தின வாழ்த்தில் ஆண்களுக்கு கமல் வைத்த குட்டு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 08, 2020, 02:05 PM IST
“நீங்க இத கத்துக்கிட்டாலே போதும்”...மகளிர் தின வாழ்த்தில் ஆண்களுக்கு கமல் வைத்த குட்டு...!

சுருக்கம்

சம வாய்ப்பும், பெண்களை சமமாக மதித்து நடத்தும் குணத்தையும் ஆண்கள் கற்றுக்கொண்டாலே போதும் பெண்களுக்கு எல்லாமே கிடைத்துவிடும் என்று மகளிர் தினத்தில் கமல் வைத்துள்ள குட்டு, அனைவரையும் கவர்ந்துள்ளது. 

உலகம் முழுவதும் இன்று பெண்கள் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது இந்திய பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம் கோவிந்த் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து திரைப்பிரபலங்களும் தங்களது மகளிர் தின வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: மகளிர் தினத்தில் லேடி சூப்பர் ஸ்டாருக்கு கிடைத்த கெளரவம்... ஸ்டைலிஷ் லுக்கில் கெத்து காட்டிய நயன்தார...!

உலக நாயகன் கமல் ஹாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், பெண்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் என்ற முழக்கத்தோடு பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புக்களும், ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும்.தினசரி இந்த சவால்களை தகர்த்தெறிகின்ற வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: நடிகர் விஜய் தேவரகொண்டா பெயரில் ஆபாச சாட்டிங்... இளம் பெண் மூலம் பொறி வைத்து பிடிக்கப்பட்ட போலி ஆசாமி...!

இந்த ட்வீட்டில் கமல் சொல்ல வந்த விஷயத்தை சுற்றி வளைக்காமல் நல்ல தமிழில் எளிமையாக கூறியுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. சம வாய்ப்பும், பெண்களை சமமாக மதித்து நடத்தும் குணத்தையும் ஆண்கள் கற்றுக்கொண்டாலே போதும் பெண்களுக்கு எல்லாமே கிடைத்துவிடும் என்று மகளிர் தினத்தில் கமல் வைத்துள்ள குட்டு, அனைவரையும் கவர்ந்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?
தமிழகம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே பாஜக விருப்பம்..! இயக்குநர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!