மகளிர் தினத்தில் லேடி சூப்பர் ஸ்டாருக்கு கிடைத்த கெளரவம்... ஸ்டைலிஷ் லுக்கில் கெத்து காட்டிய நயன்தாரா....!

Published : Mar 08, 2020, 11:21 AM IST
மகளிர் தினத்தில் லேடி சூப்பர் ஸ்டாருக்கு கிடைத்த கெளரவம்... ஸ்டைலிஷ் லுக்கில் கெத்து காட்டிய நயன்தாரா....!

சுருக்கம்

அந்த நிகழ்ச்சியில் சும்மா கெத்தா, ஸ்டைலா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் போட்டோ தாறுமாறு வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் நயனுக்கு ரசிகர்கள் மகளிர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். 

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டார். டாப் ஹீரோக்கள் படம் என்றாலே முதலில் நயன்தாரா  கால்ஷீட் செக் பண்ணுங்க என்று சொல்லும் அளவிற்கு தனி இடம் பிடித்துள்ளார். நடிப்பிலும் பில்லா போன்ற கிளாமர் படமானாலும் சரி, அறம் போன்ற ஹீரோயின் சப்ஜெக்ட் ஆனாலும் சரி கலக்கி அடிக்கிறார். 

தற்போது சூப்பர் ஸ்டார் உடன் தர்பார் படத்தை கையோடு, ஆர்.ஜே. பாலாஜியின் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தார். அந்த படத்தின் செகண்ட் லுக் கூட சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. இதையடுத்து மீண்டும் சூப்பர் ஸ்டாரின் தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ள நயன்தாரா அதற்காக ஐதராபாத் சென்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின. அந்த படத்தை முடித்த பிறகு காதலன் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள காத்து வாங்குல இரண்டு காதல் படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படி தொடர்ந்து படங்களில் நடிப்பதற்காக பிசியாக பறந்து கொண்டே இருந்தாலும், நயன் மற்ற பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். சினிமா தொடர்பான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டேன் என்பதை கொள்கையாக கொண்டிருந்தாலும் நயன்தாரா மற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் சும்மா கெத்தா, ஸ்டைலா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் போட்டோ தாறுமாறு வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் நயனுக்கு ரசிகர்கள் மகளிர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். அந்த கெத்து போட்டோஸ் இதோ.... 

 

 

 

 

 

 

 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?
தமிழகம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே பாஜக விருப்பம்..! இயக்குநர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!