முதலில் நார்மலாக பேச்சை ஆரம்பித்த கவிஞர், போக...போக.. பச்சை, பச்சையாக திட்ட ஆரம்பித்துவிட்டாராம்.
இன்று உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தமது துறைகளில் சாதித்த பெண்கள் முதல் வீட்டை கட்டி ஆளும் மனைவிமார்கள் வரை அனைவருக்கும் இந்த நாள் மிகவும் விசேஷம். குறிப்பாக அரசியல் கட்சியில் இருக்கும் பெண்கள் தமது தலைவர்களிடம் இன்றைய நாளில் வாழ்த்துகளை பெற செல்வது இயல்பான ஒன்று.
அப்படித் தான் புதிதாக கட்சி ஆரம்பித்து அரசியலில் வெற்றிடத்தை நிரப்ப வந்தவர் ஆழ்வார் பேட்டை ஆண்டவர். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்ததால் அவருக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் கூட 21 வருடங்களுக்கு முன்பு அவர் கொடுத்த அதிர்ச்சி முத்தம் குறித்து நடிகை ஒருவர் பேசியது சர்ச்சையை கிளம்பியது. ஆனால் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை.
ஆண்டவரின் கட்சியில் ஆண்கள் அளவிற்கு பெண்களுக்கும் சம உரிமை கொடுத்தே உள்ளனர். அதனால் இன்று மகளிர் தினமாகிட்டே ஆண்டவர் கிட்ட போய் வாழ்த்து வாங்கிட்டு வரலாம் என அந்த கட்சியில் உள்ள பழம் பெரும் ‘ஸ்ரீ’ நடிகையும், தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகரின் மனைவியும் கிளம்பி போயுள்ளனர்.
ஆசை ஆசையாக வாழ்த்து வாங்க போனவங்களை, ஆண்டவர் கூடவே இருக்கும் பாடலாசிரியரும் மற்ற நிர்வாகிகள் இருவரும் பாதியிலேயே தடுத்து நிறுத்தி வாய்க்கு வந்தபடி வசைபாடி உள்ளனர். சமீபத்தில் சினிமா விபத்து ஒன்று திரைத்துறையையே உலுக்க, அதில் தொடர்புடையதா? என உச்ச நட்சத்திரமான இவரையும் கூப்பிட்டு மத்திய புலனாய்வுத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். அப்ப இந்த இரண்டு பெண் நிர்வாகிகளும் வராமல் எஸ்கேப் ஆகிவிட்டனராம், அதற்காக தான் இந்த அர்ச்சனை என்று கூறப்படுகிறது.
முதலில் நார்மலாக பேச்சை ஆரம்பித்த கவிஞர், போக...போக.. பச்சை, பச்சையாக திட்ட ஆரம்பித்துவிட்டாராம். இதனால் கொதிப்படைந்த அந்த பிரபல முன்னாள் ‘ஸ்ரீ’நடிகை, நான் அவர்கிட்ட பேசிக்கிறேன் என்று சொல்லி போக, அவரோ எல்லாத்தையும் கேட்டுக்கொண்டு சும்மா இருந்துள்ளார். மகளிர் தினத்தில் இப்படி ஒரு அவமானமா...? என்று கொதித்து போன இருவரும் அங்கிருந்து நடையை கட்டியுள்ளனர்.