JollyOGymkhana next promo : தெலுங்கு மாஸ்டருடன் மல்லுக்கட்டும் நெல்சன்..‘ஜாலியோ ஜிம்கானா’ நெக்ஸ்ட் ப்ரோமோ ரெடி

Kanmani P   | Asianet News
Published : Mar 19, 2022, 11:53 AM IST
JollyOGymkhana next promo : தெலுங்கு மாஸ்டருடன் மல்லுக்கட்டும் நெல்சன்..‘ஜாலியோ ஜிம்கானா’ நெக்ஸ்ட் ப்ரோமோ ரெடி

சுருக்கம்

JollyOGymkhana next promo : ஜாலியோ ஜிம்கானா பாடலின் அடுத்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் நெல்சனின் வழக்கமான கிண்டல் கேலிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

மாஸ்டரை தொடர்ந்து பீஸ்ட் :

மாஸ்டர் படத்தில் வாத்தியாராக வந்தது ரசிகர்ளை கவர்ந்த விஜய் இதையடுத்து  நெல்சனுடன் கைகோர்த்துள்ளார். நெல்சன் ஏற்கனவே லேடி சூப்பர் ஸ்டாரின் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர் உள்ளிட்ட படங்களின் மூலம் அறியப்பட்டவர். இரண்டு படங்களிலும் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது எனவே பீஸ்டும் அதே மோடில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயின் புதிய அவதாரம் பீஸ்ட் :

பீஸ்ட்  படத்தை சான் பிக்சர்ஸ் தயாரிக்க பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். அதோடு பிரபல இயக்குனர் செல்வராகவன் இந்த படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாக உள்ளார். முக்கிய  மேலும் விடிவி கணேஷ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஷான் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 

மேலும் செய்திகளுக்கு.. சென்சாருக்கு சென்ற பீஸ்ட்...பின்னர் தான் ரிலீஸ் தேதி அறிவிப்பாம்

டாக்டர் கூட்டணியில் பாடல்கள் :

நெல்சனின் முந்தைய படமான டாக்டர் பாடல்களை வீட்டா நெல்சன், சிவகார்த்திகேயன், அனிரூத் கூட்டணியில் வெளியான ப்ரோமோ மாஸ் காட்டி இருந்தது. அதே பேட்டர்னில் பீஸ்ட் பாடலும் தயாராகியுள்ளது. இவர்கள் மூவரும் நடித்திருந்த அரபிக் குத்து ப்ரோமோ இன்றும் ட்ரெண்டாகி வருகிறது.

முதல் சிங்கிள் அரபிக் குத்து :

இந்த படத்திலிருந்து முதல் சிங்குளாக அரபிக் குத்து வெளியானது. காதலர் தின சிறப்பாக வெளியான இந்த பாடல் எக்கசக்க வரவேற்பை பெற்றதோடு ரீல்சிலையும் கலக்கி வருகிறது. அதோடு பட்டி தொட்டியெல்லாம் இந்த பாடல் தனது கால் தடத்தை பாதித்துள்ளது.

விஜய் குரலில் ஜாலியோ ஜிம்கானா :

இரண்டாவது சிங்குளாக ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். இந்த ப்ரோமோவில் விஜய், நெல்சன், அனிரூத் இடம்பெற்றிருந்தனர். மூவரின் கலக்கல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஏப்ரலில் வெளியாகும் இந்த பாடத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாவது ரசிகர்ளை குஷிப்படுத்தி வருகிறது.

பாடலுக்கு என்ன அர்த்தம் :

ஜாலியோ ஜிம்கானா குறித்த பல கேள்விகள் எழுந்தன. புரியாத பாஷையில் பாடல் எழுதுவதா என்கிற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் பாடலுக்கு வரிகள் எழுதிய  கு.கார்த்தி, ஜாலியோ ஜிம்கானாவுக்கான குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது  “எந்த மாதிரி பிரச்சனை நடந்தாலும், அது நடந்தது தான். அதை நம்மால் மாற்ற முடியாது. அதனால் அதைப்பற்றி கவலைப்படாமல் விட்டுட்டு போய்கிட்டே இருக்கணும். என்ன நடந்தாலும் ஜாலியா இருக்கணும்,  என தெரிவித்துள்ளார்.  

மேலும் செய்திகளுக்கு.. Beast Update : ஆடியோ லாஞ்ச் இல்லேனா என்ன... துபாயில் செம்ம டிரீட் வெயிட்டிங்- பீஸ்ட் படத்தின் மெர்சலான அப்டேட்

நடனம் குறித்த ப்ரோமோ :

தற்போது மீண்டும் இதன் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பனிப்பிரதேசத்தில் நடனம் ஆடுவது போன்ற கோரியோகிராஃபி செய்யப்பட்டுள்ளது. இதில் நாடன் இயக்குனர் மற்றும் நெல்சன் உள்ளனர். அங்கு நாடன் பயிற்சி செய்யும் நகைச்சுவை நடிகர்களை பங்கமாக கலாய்க்கும் நெல்சனின் கலாய் தெறிக்க விட்டுள்ளது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

25 புதிய படங்கள் மற்றும் வெப் தொடர்கள் மீது ரூ.4,000 கோடி முதலீடு... ஜியோஹாட்ஸ்டார் அதிரடி
மதுரை, மலப்புரம், மாண்டியாவிலிருந்து வரும் படங்களே உண்மையான தேசிய கலாச்சார சின்னங்கள்: கமல்ஹாசன் புகழாரம்