Ilayaraja remembers SPB: இசை சக்கரவர்த்தியை நினைவு கூர்ந்த இசைஞானி..! மேடையில் கண் கலங்கி உருக்கம்..!

Anija Kannan   | Asianet News
Published : Mar 19, 2022, 11:02 AM IST
Ilayaraja remembers SPB: இசை சக்கரவர்த்தியை நினைவு கூர்ந்த இசைஞானி..! மேடையில் கண் கலங்கி உருக்கம்..!

சுருக்கம்

Ilayaraja remembers SPB: அண்மையில் சென்னையில் நடந்த ''ராக் வித் ராஜா'' இசை நிகழ்ச்சியில், இளையராஜா எஸ்பிபியை நினைவு கூர்ந்து மேடையில் கண் கலங்கி உருக்கமாக பேசியுள்ளார்.

அண்மையில் சென்னையில் நடந்த ராக் வித் ராஜா இசை நிகழ்ச்சியில், இளையராஜா எஸ்பிபியை நினைவு கூர்ந்து மேடையில் கண் கலங்கி உருக்கமாக பேசியுள்ளார். 

இசை ஜாம்பவான் இளையராஜா:

தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவானும் ஆன இசைஞானி , 40 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய பயணத்தை தொடர்கிறார். இவருடைய இசை மழையில் பட்டி, தொட்டி எங்கும் நனைய ஏராளமான ரசிகர்கள் இவரை சூழ்ந்து கொண்டனர். இதுவரை, கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றி உள்ளார். இவரது இசையில் தற்போது. வெற்றிமாறனின் விடுதலை படம் தயாராகி வருகிறது. 

இசையமைப்பாளர் இளையராஜா,அடிக்கடி இசைக்கச்சேரிகள் நடத்தி மக்களை இசை வெள்ளத்தில் ஆழ்த்துவார். இவருடைய இசைக்கு மயங்காத குயில்களே கிடையாது என்று பலராலும் போற்றப்படுபவர். அண்மையில் துபாயில் இவர் நடத்திய இசைக்கச்சேரிக்கு ஏகோபித்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ராக் வித் ராஜா:

 இந்நிலையில், தற்போது சென்னை தீவு திடலில் இவரின் ராக் வித் ராஜா என்ற இசை நிகழ்ச்சிக்காக  பிரம்மாண்டமான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த இசை நிகழ்ச்சி 8 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்றது.

ந்த இசை நிகழ்ச்சியில் முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பாடியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பாடி னார். யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி,கங்கை அமரன், பவதாரணி, கீர்த்தி உதயாநிதி என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நடிகர் தனுஷ் விவாகரத்துக்கு பிறகு தனது மகன்களுடன் வந்து கலந்து கொண்டிருக்கிறார்.

 எஸ்பிபியை நினைவு கூர்ந்த இளையராஜா:


 
இசை நிகழ்ச்சி துவங்கியதும், இளையராஜா, பாடல்கள் பாட ஆரம்பித்தார். இதையடுத்து, பாடல்களின் இடையே இளையராஜா எஸ்பிபியை நினைவு கூர்ந்து கண்கலங்கி உருக்கமாக பேசியுள்ளார்.

எஸ்பிபியுடன் தன்னுடைய திரையிசைப் பயணத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், எஸ்பிபியை நினைவு கூறுவதில் இந்த மேடையை மீண்டும் பயன்படுத்துகிறேன். அவரை பற்றிக் கூற வார்த்தைகளே வரவில்லை, என்னுடை இசை பயணத்தில் எஸ்பிபிக்கு பெரும்பங்கு உண்டு என்றார். 

45 வருட நட்பை மறக்காத இளையராஜா:

பிறகு, எஸ்.பி.பிக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தும் படி அனைவரிடத்திலும் கேட்டுக்கொண்டார். பின்னர், லதா மங்கேஷ்கர் மறைந்தது வருத்ததிற்குரியது என்று இளையராஜா மேடையில் வருத்தம் தெரிவித்தார். இளையராஜா, வருத்தம் தெரிவித்தது கச்சேரியில் கலந்து கொண்ட அனைவரின் கண்களில் கண்ணீர் வர வைத்தது. மேலும், எஸ்பிபி பெரும்பாலும் கச்சேரிகளில் இளையராஜா பாடல்களை தான் பாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...Valimai OTT Release: அதற்குள் மவுஸு குறைந்த அஜித்தின் வலிமை திரைப்படம்!ஒரு மாதத்திற்குள் OTT தளத்தில் வெளியீடு..!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!