Vijayakanth Latest Pics: கேப்டன் வீட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொண்டாட்டம்...விஜயகாந்தின் லேட்டஸ்ட் லுக்.!

Anija Kannan   | Asianet News
Published : Mar 19, 2022, 11:52 AM IST
Vijayakanth Latest Pics: கேப்டன் வீட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொண்டாட்டம்...விஜயகாந்தின் லேட்டஸ்ட் லுக்.!

சுருக்கம்

Vijayakanth Latest Pics: கேப்டன் விஜயகாந்தின், சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில், ஆழ்த்தியுள்ளது. 

கேப்டன் விஜயகாந்தின், சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில், ஆழ்த்தியுள்ளது.  தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத நடிகர் மட்டுமின்றி, அரசியல் வாதி, சமூக ஆர்வலர் என பன்முக தன்மை கொண்டவர். இவர் படங்களில் நடிப்பதை தாண்டி மக்களுக்காக நிறைய செய்துள்ளார். 

விஜயகாந்த் -பிரேமலதா திருமணம்:

1990-ல் விஜயகாந்த் -பிரேமலதா திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு, விஜய் பிரபாகர் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

தேமுதிகவின் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த், இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர். இதையடுத்து, கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது விஜயகாந்த் முதன்முதலில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உடல்நலம்:

உடல் நலக்குறைவால், சில வருடங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல், சினிமா, அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கிறார்.

விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அவரின், கட்சி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். இதனால், அவரை நேரில் பார்க்க முடியவில்லையே என தொண்டர்களும், ரசிகர்களும் ஏக்கம் தெரிவித்தனர். 

இதையடுத்து, சமீபத்தில் விஜயகாந்த் டீசர்ட், பேண்ட் உடன், உடல்மெலிந்த தோற்றத்தில்’ நாற்காலியில் அமர்ந்தபடி, குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று, வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

மேலும் படிக்க...Ilayaraja remembers SPB: இசை சக்கரவர்த்தியை நினைவு கூர்ந்த இசைஞானி..! மேடையில் கண் கலங்கி உருக்கம்..!

கொண்டாட்டத்தில் விஜயகாந்த்:

இந்த நிலையில், இன்று தனது மனைவி பிரேமலதா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை  விஜயகாந் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் அவர், இன்று எனது மனைவி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை, எனது மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகப்பாண்டியனுடன்,  தெரிவித்த போது… என பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பிரேமலதாவிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து கூறி வருகிறார்கள்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?