பிரேக்கிங் பேட்... ஜோக்கிங் பேட்..! புதிய காமெடியுடன் மீண்டும் வருகிறது லொள்ளு சபா குழு! வெளியான புரோமோ!

By manimegalai a  |  First Published Jan 19, 2023, 5:11 PM IST

லொள்ளு சபா குழுவினர் நடிப்பில், மீண்டும் துவங்கப்பட உள்ளது - பிரேக்கிங் பேட் ஜோக்கிங் பேட் நிகழ்ச்சி இதுகுறித்த புதிய டீசரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


எத்தனையோ காமெடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும், லொள்ளு சபா நிகழ்ச்சி தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. 2004 முதல் 2007 வரை மொத்தம் 5 சீசன்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா, நிகழ்ச்சி தமிழ் திரையுலகிற்கு பல காமெடி நடிகர்களை பெற்று தந்துள்ளது.

Tap to resize

Latest Videos

'வேதாளம்' ரீமேக் கொடுத்த உற்சாகம்... மீண்டும் அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை கையில் எடுத்த சிரஞ்சீவி?

குறிப்பாக காமெடியனாக கோலிவுட் திரையுலகில் அறிமுகமாக, தற்போது ஹீரோவாக நடித்து வரும் சந்தானத்திற்கு அறிமுகம் கொடுத்தது இந்த நிகழ்ச்சி தான். ராம் பாலா உருவாக்கிய  இந்த நகைச்சுவை நிகழ்ச்சி, தற்போது மீண்டும் புதிய கோணத்தில் 'ஜோக்கிங் பேட்' என்கிற பெயரில் ஒளிபரப்பாக உள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம், டீசர் வெளியிட்டு அறிவித்துளளது.

தங்க நிற உடையில்... கண்ணை கட்டும் கவர்ச்சியில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்! அதிரி புதிரி போட்டோஸ்!

இந்த நிகழ்ச்சி நெட்ஃபிக்ஸ் இந்தியாவின், யூடியூப் சேனலில் ஜனவரி 20 அன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. Netflix இல் ஜோக்கிங் பேட் குறித்து வெளியாகியுள்ள டீசரில்... லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான மனோகர், சுவாமிநாதன், ஜீவா, சேஷு போன்றவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த டீசர் புதிய கோணத்தில் வெளியாகியுள்ளது மீண்டும் இந்த நிகழ்ச்சியின் மீதான, எதிர்பார்ப்பை அதிகரிக்க  செய்துள்ளது.

 

"Mannenna. Vepenna. Velakkena, series mudinju pona enakkena?" nu solli Breaking Bad-ah spoof panna varanga.

Joking Bad, a Breaking Bad spoof, arrives on 20th January at 6pm on Netflix India's YouTube channel. pic.twitter.com/OC0nGwmsM4

— Netflix India South (@Netflix_INSouth)

 

click me!