விமான நிலையத்தில் பரிசோதனை செய்வதிலும் மத பாகுபாடு... இதெல்லாம் எவ்ளோ கேவலம் தெரியுமா? - சனம் ஷெட்டி கோபம்

Published : Jan 19, 2023, 02:13 PM IST
விமான நிலையத்தில் பரிசோதனை செய்வதிலும் மத பாகுபாடு... இதெல்லாம் எவ்ளோ கேவலம் தெரியுமா? - சனம் ஷெட்டி கோபம்

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி கோவை விமான நிலையத்தில் பரிசோதனை செய்வதிலும் மதப் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

நடிகை சனம் ஷெட்டி கோவையில் இருந்து சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்துள்ளார். அப்போது அவரது உடைமைகளையும், பயணிகள் சிலரது உடமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில்  நடிகை சனம் ஷெட்டி டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் சென்றதாகவும், விமானத்தில் ஏறும் முன் அங்கிருந்த பெண் அதிகாரி ஒருவர் எனது கைப்பை மற்றும் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த 2 பேரின் பைகளை சோதனை செய்தார் எனவும், இதுகுறித்து கேட்டபோது அந்த அதிகாரி குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பிற்காக சோதனை நடத்தப்படுகிறது என்று தெரிவித்தாகவும், சோதனை செய்த இடத்தில் எந்த ஸ்கேனர் கருவியும் இல்லை, வெறும் கண்களால் ஒரு நபரை பார்த்து சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்துவது மன வேதனை தருகிறது எனவும்,  விமானத்தில் 190 பேர் பயணம் செய்த நிலையில் மற்றவர்கள் பைகளை ஏன் சோதனை செய்யவில்லை எனவும் தெரிவித்து இருந்தார். 

இதையும் படியுங்கள்... அத்துமீறி நடந்துகொண்ட கல்லூரி மாணவனுக்கு நடிகை அபர்ணா பாலமுரளி கொடுத்த அல்டிமேட் பதிலடி - வைரல் வீடியோ

குறிப்பிட்ட சிலரை மட்டும் சோதனை செய்தது மிகவும் கஷ்டமாக உள்ளது, சோதனை செய்தால் எல்லோரது உடைமைகளையும் சோதனை செய்ய வேண்டும் என அந்த வீடியோவில்  பேசியுள்ளார். நடிகை சனம்ஷெட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. 

இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது, வருகிற 26 ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது எனவும்,  இதன்படி கோவை விமான நிலையத்தில் பயணிகள் 2 கட்டமாக சோதனை செய்யப்படுகின்றனர், விமான நிலையத்தின் உள்ளே செல்லும் போது ஒரு முறையும், விமானத்தில் ஏறும் முன் ஒரு முறையும் சோதனை செய்யப்படுகிறது எனவும், குறிப்பிட்ட நபர்களை தேர்வு செய்து சோதனை செய்யப்படவில்லை, அனைவரும் சோதனைக்கு உட்படுத்தபடுவதாக தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்... டபுள் சந்தோஷத்தில் கமல் மகள்... ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறி ஸ்ருதிஹாசன் நடத்திய வேறலெவல் போட்டோஷூட் வைரல்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!