விக்ரம் பிரபு நடிக்கும் பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் திரையரங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Published : Jan 18, 2023, 08:55 PM IST
விக்ரம் பிரபு நடிக்கும் பாயும் ஒளி  நீ எனக்கு' படத்தின் திரையரங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

சுருக்கம்

விக்ரம் பிரபு-டாலி தனஞ்சயா-வாணி போஜன் நடித்த “பாயும் ஒளி  நீ எனக்கு ” படத்தின் முழு திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத உரிமைகளையும் SP சினிமாஸ் பெற்றுள்ளது.

SP சினிமாஸ் தமிழ்த் திரையுலகில் தனித்துவமான மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதில் முன்னோடியாக இருந்து வருகிறது. நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடுவதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனம் SP சினிமாஸ். அந்த வகையில் தான்  விக்ரம் பிரபுவின்  நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படமான “பாயும் ஒளி  நீ எனக்கு ” திரைப்படத்தை SP சினிமாஸ் தேர்ந்தெடுத்துள்ளது, மேலும் அதை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வெளியிடவுள்ளது. இப்படம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.

கார்த்திக் அத்வைத் இந்த படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். அதோடு, தனது தயாரிப்பு நிறுவனமான கார்த்திக் மூவி ஹவுஸுக்காக இந்தப் படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். கார்த்திக் அத்வைத் நியூயார்க் ஃபிலிம் அகாடமியின் முன்னாள் மாணவர். தனது பட்டப்படிப்பிற்குப் பிறகு, இயக்குனர் ராஜமௌலி அவர்களுடன் தொடர்ந்து பயணித்த புகழ்பெற்ற மூத்த எடிட்டரான கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் அவர்களின் கீழ் கார்த்திக் பணியாற்றினார். கார்த்திக் பல விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார், மேலும் அவரது அடுத்த படம் கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர்.சிவராஜ் குமாருடன் அமையவிருக்கிறது. சிவராஜ் குமார், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  உடன் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

பிரமாதமாக வழங்கப்பட்ட இந்த படத்தின் ஆக்‌ஷன் டீஸர், அதன் நேர்த்தியான காட்சிகள் மற்றும் படத்தொகுப்புகள், அட்டகாசமான இசை மற்றும் விக்ரம் பிரபுவின் சிறந்த திரை ஈர்ப்பு ஆகியவை , படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்கனவே உயர்த்தியுள்ளது.

கன்னட திரைதுறையின் மிகவும் பிரபலமான நடிகர் டாலி தனஞ்சயா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.  அவரது அதிரடி காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில் அமைந்துள்ளன  . வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் இந்த படத்தில் ஆனந்த், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் சாகர் மஹதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அவர் ஏற்கனவே தெலுங்குத் துறையில்  பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார் . “பாயும் ஒளி  நீ எனக்கு ” திரைப்படம் தமிழ்த் துறையில் அவரது இசை அறிமுகத்தைக் குறிக்கிறது. ‘பரியேறும் பெருமாள்’ புகழ் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பை கவனிக்கிறார். பி.எல். சுபேந்தர் (கலை இயக்குனர்), தினேஷ் காசி (ஸ்டன்ட் இயக்குனர்), மற்றும் ராஜகிருஷ்ணன் - 4 Frames (ஒலி கலவை), சதீஷ் - AIM (PRO) ஆகியோர் படத்தின் மற்ற முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றுகின்றனர்.

SP சினிமாஸ் நிறுவனம் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் டீசல்  என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும் SP சினிமாஸ்,  K13 (அருள்நிதி), மாறா (மாதவன்), ஓ மனபெண்ணே (ஹரிஷ் கல்யாண்) போன்ற தனித்துவமான கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. . SP சினிமாஸ் சிறந்த உள்ளடக்கம் கொண்ட பல வெற்றி படங்களை விநியோகித்துள்ளது, அதில் அசோக் செல்வன் நடித்த வேழம் மற்றும் தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படமான ‘பாரம்’ ஆகியவை  குறிப்பிடத்தக்கவை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சமந்தாவின் ஹனிமூன் பிளான்: ராஜ் உடன் ரொமான்டிக் டிரிப் எங்கே?
ஒரே ஆண்டில் 2 தோல்விகள் கொடுத்த பிரபாஸ்!