
நடிகர் சத்யராஜ், தரமணி படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த வசந்த் ரவியுடன் இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'வெப்பன்'. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் மற்றும் திரில்லர் ஜர்னரில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை, வெள்ளை ராஜா, சவாரி, போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் குகன் செம்மியப்பன் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கும்மிடிபூண்டி அருகே உள்ள ஏ ஆர் ஆர் ஃபிலிம் சிட்டியில் நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது சுமார் 40 அடி உயரத்தில் மீன் விளக்குகளை பொருத்தும் பணியில் லைட் மேன்கள் பலர் ஈடுபட்டிருந்தனர். இதில் பணியாற்றிய குமார் என்கிற லைட் மேன் கால் தவறி கீழே விழுந்து, உயிரிழந்தார். இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படப்பிடிப்பு தளங்களில் உரிய முதலுதவி சிகிச்சையுடன், படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தாலும் எதிர்பாராத விதமாக அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதும்,சில உயிரிழப்புகள் ஏற்படுவதும் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
'வாரிசு' பட தயாரிப்பாளர் மீது கோபத்தில் உள்ளாரா விஜய்? சொன்னபடி நடந்து கொள்ளாதது தான் காரணமா..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.