இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது "நினைவெல்லாம் நீயடா". படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது "நினைவெல்லாம் நீயடா". லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கி வருகிறார்.
பிரஜன் கதாநாயகனாக நடிக்க மனிஷா யாதவ் மற்றும் சினாமிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இளம் நாயகன் நாயகியாக ரோஹித் - யுவலட்சுமி ஜோடி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டரை, இளம் ரசிகர்களின் இதயம் கவர்ந்த இயக்குநரும், தனது மாறுபட்ட நடிப்பால் முன்னணி நடிகராக உயர்ந்து வருபவருமான கௌதம் வாசுதேவன் மேனன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். "இந்த படத்திற்காக அசத்தலான ஐந்து பாடல்களை உருவாக்கி தந்திருக்கிறார் இசைஞானி. அதில் "இதயமே ...இதயமே..." என்று தொடங்கும் பாடலை இளையராஜா எழுத "யங் மேஸ்ட்ரோ' யுவன் சங்கர் ராஜா பாடியிருக்கிறார். இந்த பாடல் நிச்சயமாக ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடிப்பது உறுதி. பழநிபாரதி, சினேகன் எழுதியிருக்கும் மற்ற பாடல்களும் ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமரும். மனசுக்குள் தோன்றிய முதல் காதல் மண்ணுக்குள் போகும் வரை மறக்காது என்ற கருத்தை மையமாக வைத்து இளமை துள்ள இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். பள்ளி பருவத்து காதலை கொண்டாடிய அழகி ஆட்டோகிராப் பள்ளிக்கூடம் காதல் 96 படங்களின் வரிசையில் 'நினைவெல்லாம் நீயடா' படமும் நீங்கா இடம் பிடிப்பது உறுதி. விரைவில் முதல் பாடல் வெளியிடப்பட இருக்கிறது" என்று தெரிவித்தார் இயக்குனர் ஆதிராஜன்.
இந்த படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார். முனிகிருஷ்ணன் கலை அமைக்க சண்டை காட்சிகளை பிரதீப் தினேஷ் அமைக்க, நடன காட்சிகளை தினேஷ் மற்றும் தீனா மாஸ்டர்கள் வடிவமைத்திருக்கின்றனர். தயாரிப்பு நிர்வாகம் இளங்கோ.
இந்நிலையில், சுஷாந்த் சிங்கின்... வளர்ப்பு நாய் உயிரிழந்துவிட்டதை சுஷாந்தின் தங்கை மிகவும் உருக்கமாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சுஷாந்த்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்துள்ளார்.
"நீண்ட தூரம் நீ போய்விட்டாய்... நீ உன்னுடைய நண்பனுடன் சொர்க்கத்தில் இணைந்துவிட்டாய். நானும் அடுத்து வருகிறேன். அதுவரை மிகுந்த கவலையுடன்..." என குறிப்பிட்டு அவர்களது வளர்ப்பு நாய் மறைவு செய்தியை தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
Best wishes to the team pic.twitter.com/yoEy1b86g8
— Gauthamvasudevmenon (@menongautham)