நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை தமன்னா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதையும் படிங்க: தனுஷின் 'வாத்தி' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'நாடோடி மன்னன்' லிரிக்கல் பாடல் வெளியானது! வீடியோ..
மேலும், இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மலையாள நடிகர் மோகன்லால் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகரான சுனில் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சரும நிறத்தை இழக்கிறேன்'புது நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை உருக்கம் இந்த அறிகுறிகள் தான் காரணமா?
நடிகர் சுனில், அன்மையில் வெளியான புஷ்பா படத்தில் நடிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று மொழிகளை சேர்ந்த அதாவது மலையாளம், தெலுங்கு, கன்னட நடிகர்கள் நடிக்கும் ஒரு பான் இந்தியா படமாக ஜெயிலர் உருவாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.