
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் வடிவேலுக்கு பிரபலங்கள் பலரும் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "எனது தாய் சரோஜினி நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மறைந்திருக்கிறார். தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் மு.க.அழகிரி நேரில் வந்து ஆறுதல் கூறினார்.
அவர் யாருக்கும் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்று பொங்கலை அனைவரும் நல்லபடியாக கொண்டாடிய பின்னர் மறைந்திருக்கிறார்.
விக்கிப்பீடியாவில் தவறான தகவல் உள்ளது.
எனவே அதனை அழித்து விடுங்கள் என்றும் மிகுந்த சோகத்துடன் நடிகர் வடிவேலு தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.