'ஜெயிலர்' ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளதை அறிவிக்கும் விதமாக, தற்போது புதிய ப்ரோமோ ஒன்றை சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
'கோலமாவு கோகிலா', 'டாக்டர்', 'பீஸ்ட்' போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், படக்குழுவினர் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி, இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
சூப்பர் ஸ்டார், ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ரஜினிகாந்த் உடன் மலையாள நடிகர் விநாயகன், மோகன்லால் , கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ரோபோ சங்கர், வசந்த் ரவி, தமன்னா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து இப்படத்தின் அப்டேட் குறித்து... இயக்குனர் மற்றும் படக்குழுவினரிடம் கேள்வி எழுப்பி வந்த நிலையில், விரைவில் ஃபஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆக உள்ளதை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் வழக்கம்போல் தன்னுடைய பாணியில் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
இந்த ப்ரோமோவில் அனிருத்துடன் பேசும் நெல்சன் திலீப் குமார், "வாராவாரம் இப்படியே கேட்டா எப்படி? எத்தனை வாரம் கேட்டாலும்... நீங்க தான் மியூசிக், பாட்டு நீங்க தான் தரணும் என கூறுகிறார். நெல்சன் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பியுள்ள நிலையில், விரைவில் இதற்கான பதிலை அனிரூத் கொடுப்பார் என தெரிகிறது.
. andha first single…?? ⏳⏰ pic.twitter.com/9Ytc636nDj
— Sun Pictures (@sunpictures)