Leo படத்தில் இருந்து விஜய், அனிருத் மற்றும் அசல் கோளாறு ஆகிய மூவரும் பாடிய "நா ரெடி" என்ற பாடல் வெளியாகி இன்றளவும் ரசிகர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் பெரிய அளவிலான எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து விஜய், அனிருத் மற்றும் அசல் கோளாறு ஆகிய மூவரும் பாடிய நான் ரெடி என்ற பாடல் வெளியாகி இன்றளவும் ரசிகர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதே சமயம் இந்த பாடல் சில சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், தற்பொழுது தான் அது அடங்க துவங்கியுள்ளது. ஆனால் அது முழுமையாக அடங்குவதற்குள் மற்றொரு சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார் லியோ பட நடிகர் மன்சூர் அலிகான். மூத்த நடிகரான மன்சூர் அலிகான் தனது காரில், சீட் பெல்ட் அணியாமல், "நா ரெடி" பாடலுக்கு செமயா vibe செய்துகொண்டே கார் ஓட்டும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படியுங்கள் : இன்னும் 6 மாதம் காத்திருக்கமாட்டேனா? - ஹனு-மான் பட இயக்குனர் நெகிழ்ச்சி!
விஜய் ரசிகர்கள் இதை பெரிய அளவில் கொண்டாடி வந்தாலும், 61 வயது நிரம்பிய ஒரு மூத்த நடிகர், சீட் பெல்ட் அணியாமல், காருக்குள் இப்படி நடனமாடிக் கொண்டு காரை இயக்குவது பெரும் தவறு என்று கூறி தற்பொழுது நெட்டிசன்கள் மன்சூரலிகானை வறுத்தெடுத்து வருகின்றார்.
Mansoor Ali Khan Vibing 🥵 pic.twitter.com/3uANDuhDKV
— 𝗩𝗶𝗷𝗮𝘆 𝗧𝗵𝗲 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿ⱽᵀᴹ (@VTMOffl)இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மன்சூரலிகளின் மிகப்பெரிய ரசிகர் என்பது நாம் அறிந்ததே, முதலில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தில் நடிக்க மன்சூர் அலிகானை தான் மனதில் வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அந்த படம் அதன் பிறகு பெரிய பட்ஜெட் படமாக மாறியதால் கார்த்திகை அணுகி அந்த படத்தை எடுத்து முடித்தார்.
இதையும் படியுங்கள் : 'மாமன்னன்' ஹிட்தான் ஆனால் டல்லடிக்கும் வசூல்!