Watch: விஜய்யின் அரசியல் வருகை... சரத்குமாரிடம் எழுப்பப்பட்ட கேள்வி! வெடித்த பிரச்சனை.! பரபரப்பு வீடியோ!

By manimegalai a  |  First Published Jul 1, 2023, 3:48 PM IST

'போர் தொழில்' படத்தின் வெற்றி விழாவில், நடிகர் சரத்குமாருக்கும், பத்திரிகையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


'போர் தொழில்' படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட சரத்குமார் விழா முடிந்ததும்,  செய்தியாளர்கள் அனைவரையும் சந்தித்து பேசினார். அப்போது தனியார் ஊடகத்தை சேர்ந்த செய்தியாளர் ஒருவர், விஜய்யுடன் அரசியல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிய போது, சிறு பிரச்சனையே வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த செய்தியாளர் விஜய்யின் அரசியல் வருகை பற்றியும், விஜய்யுடன் அரசியலில் இணைந்து பணியாற்றுவீர்களா? என எழுப்பிய கேள்விக்கு, அவர்தான் என்னுடன் கூட்டணி வைக்க வேண்டும் என சரத்குமார் பதில் அளித்தார். மேலும் நீங்கள் ஏன் முதலில் கூட்டணி குறித்து பேசுகிறீர்கள். முதலில் அவர் அரசியலில் கால் பதிக்கட்டும். அப்படி வந்தால் வரவேற்கிறோம் என்று சொல்லிவிட்டேன்.  உங்களுக்கு பரபரப்பான செய்தி வேண்டும் என்பதால், இப்படி கேள்வி எழுப்புவீர்களா? என  காட்டமாகவும் கோபமாகவும் அந்த செய்தியாளரை சாடினார்.

Tap to resize

Latest Videos

'மாமன்னன்' பட வெற்றியை ஏ.ஆர்.ரகுமானுடன் கேக் வெட்டி கொண்டாடிய கீர்த்தி - உதயநிதி! வைரலாகும் போட்டோஸ்!

நீங்கள் எந்த பத்திரிக்கையை சேர்ந்தவர் என அந்த செய்தியாளரிடம் கோப முகத்தை காட்டிய சரத்குமார், முதலில் உங்கள் முதலாளி இதனை எந்த வியூவில் பார்க்கிறார்? என தெளிவாக கேட்டுக்கொண்டு பேசுங்கள். பத்திரிக்கை துறை என்பது சமூகத்தின் நான்காது தூண் எனவே எப்போதுமே நான் செய்தியாளர்களுக்கு மதிப்பும், மரியாதையும், கொடுப்பேன். இன்று போர் தொழில் படத்தின் வெற்றிக்குக் கூட செய்தியாளர்கள் தான் காரணம் என நான் சொல்லி இருக்கிறேன் என பேசினார்.

நீங்கள் ஒரு செய்தியை எப்படி பார்க்கிறீர்கள் என முதலில் கூறுங்கள் நான் பதிலளிக்கிறேன் என சரத்குமார் கூற, நீங்கள் சொல்வது தான் செய்தி என அந்த பத்திரிகையாளர் தெரிவித்தார். சரத்குமாருக்காக இயங்குவது செய்தி கிடையாது முதலில் உங்களுடைய கருத்து என்பதே, மிகவும் முக்கியமானது எனவே முதலில் அதை சொல்லுங்கள் நான் என்னுடைய பதிலை சொல்கிறேன் என திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை பேசி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

திடீர் என நிறுத்தப்பட்ட சன் டிவி 'தாலாட்டு' சீரியல்..! இது தான் காரணமா? கிருஷ்ணா கூறிய அதிர்ச்சி தகவல்!


தொடர்ந்து பேசிய சரத்குமார், தன்னிடம் சிலர் 15 லட்சம் வாங்கினீர்களா என கேட்கிறார்கள்? ஆனால் இனி நான் நீங்க எவ்வளவு கொடுத்தீங்க என்று கேட்டு விடுவேன் என கூறியது என்ன விஷயம் என்பது, பலரையும் குழப்பமடைய செய்துள்ளது. அந்த செய்தியாளருக்கும் - சரத்குமாருக்கும் இடையே ஒரு சிறு கருத்து முரண்பாடு நிலவியதை தொடர்ந்து, என்னுடைய கருத்தை ஏற்கனவே நான் கூறிவிட்டேன் ஒவ்வொரு குடிமகனும் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே என்னுடைய கருத்து என பேசினார்.  விஜய் அரசியலுக்கு வரணுமா, வரக்கூடாதா என்பதை நான் கூற கூடாது. அது அவரவர் விருப்பம் என தெரிவித்தார்.

நாடாளு மன்ற தேர்தல் குறித்து ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்ப, அது குறித்து... சரத்குமாரை காண்டாக்கிய பத்திரிகையாளர் எதோ கேட்க, என்னிடம் பிரச்சனை பண்ணவே வந்துருக்கீங்களா? அவர் தானே என்னிடம் கேள்வி கேட்கிறார்? நீங்க ஏன் இடையில் பேசுறீங்க என மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்சனை வெடிக்க, கடைசியில் நன்றி சொல்ல வந்த நிகழ்ச்சியில் இது போன்ற கேள்விகளால் டிஸ்அப்பாயிண்ட்மென்ட் ஆகி விட்டது என அங்கிருந்து கிளப்பினார். சரத்குமாரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

click me!