Kanguva Story Update : பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், தற்பொழுது பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
முற்றிலும் மாறுபட்ட கதைய அம்சம் கொண்ட திரைப்படங்களை கையாளுவதில் தமிழ் சினிமா இயக்குனர்கள் கைதேர்ந்தவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதேபோல தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கின்ற நடிகர், நடிகைகள் வித்யாசமான கதைகளை ஏற்று நடிக்க எப்பொழுதுமே தயங்கியதில்லை.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு "கங்குவா" என்று பெயரிடப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டது. முற்றிலும் மாறுபட்ட ஒரு பெயரோடு இந்த திரைப்படம் உருவாகியது. "நெருப்பிலிருந்து பிறந்தவன்" என்பதே இந்த "கங்குவா" என்பதற்கு அர்த்தம் என்றும் பட குழு சில தகவல்களை வெளியிட்டது.
பல்வேறு நகரங்களில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சூர்யாவின் திரை வரலாற்றில் அதிக பொருட்செலவில் உருவாகும் ஒரு திரைப்படமாக, தமிழகத்தின் வனப்பகுதிகளில் முன்னொரு காலத்தில் வாழ்ந்து வந்த பல இன கூட்டங்களை குறிக்கின்ற ஒரு படமாக கங்குவா இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
7ஜி ரெயின்போ காலனி படத்தில்.. ஹீரோயினாக நடிக்கும் த்ரிஷாவின் அண்ணன் மகள்! அட இவங்களா? செம்ம சாய்ஸ்!
இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு பாடல்கள் மட்டும் வசனங்களை எழுதி வரும் பிரபல பாடலாசிரியர் மதன் கார்த்தி, கங்குவா திரைப்படம் குறித்த சில தகவல்களை தற்பொழுது பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட தகவலின்படி "கங்குவா படம் உருவாகும் சில காட்சிகளை நான் பார்த்தேன்.. சிறுத்தை சிவா அவர்களுடைய இயக்கமும், நடிகர் சூர்யா அவருடைய நடிப்பும் என்னை பிரமிக்க வைத்தது". "ஒவ்வொரு காட்சியும் மிரட்டலாக உருவாகி வருகிறது, அவதார் படத்தை போல கங்குவா திரைப்படத்திற்கு என்று ஒரு தனி கலாச்சாரம், தனி கடவுள் மற்றும் உணவு முறை என்று இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒரு முற்றிலும் மாறுபட்ட திரைப்படமாக கங்குவா இருக்கும். உண்மையில் இந்த திரைப்படத்தை வெள்ளி திரையில் பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.