ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் வைகுண்டமும் ஷண்முகமும் சூடாமணியை பார்த்து விட்டு வர இங்கே பரணியின் தோழிகள் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, வைகுண்டமும் சண்முகமும் கடைக்கு வர வெட்டுகிளி எங்க போயிட்டு வந்தீங்க என்று கேட்க ஜெயிலுக்கு என வைகுண்டம் உளறி விடுகிறார், ஆனால் வெட்டுக்கிளி காலையிலேயே காமெடி பண்ணாதீங்க என்று சொல்ல ஒரு வழியாக சண்முகம் சமாளித்து அப்பாவை திட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்கிறான்.
வீட்டிற்கு வந்த வைகுண்டம் பரணியின் தோழிகள் வந்திருப்பதை பார்த்து ஷண்முகம் இங்கே இல்லாததே நல்லது என நினைத்து கொள்கிறார், அடுத்து பரணியின் தோழிகள் கூல் ட்ரிங்க்ஸ் கேட்க பரணி வெட்டுக்கிளிக்கு போன் செய்து ஷண்முகம் கடையில் தான் இருக்கானா? கூல் ட்ரிங்க்ஸ் வேணும், நீ தான் எடுத்து வரணும். அவன் எடுத்து வர கூடாது என்று சொல்கிறாள். நீயும் வெளியவே வச்சிட்டு போய்டு எனவும் சொல்கிறாள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அடுத்து வீட்டிற்கு வந்த வைகுண்டம் சூடாமணி போட்டோவை பார்த்து கண் கலங்கி அழ அதை பார்த்த ரத்னா சண்முகத்துக்கு போன் போட்டு அப்பா அம்மா போட்டோவை பார்த்து அழுதுட்டு இருக்காரு என்று சொல்ல அவன் டென்ஷன் ஆகிறான், அந்த நேரம் வெட்டுக்கிளி வீட்டிற்கு கூல்ட்ரிங்ஸ் எடுத்து கொண்டு கிளம்ப ஷண்முகம் நான் வீட்டுக்கு தான் போறேன், நானே குடுத்து விடுகிறேன் என கூல் ட்ரிங்க்ஸ் உடன் கிளம்பி வருகிறான்.
முதலில் வைகுண்டத்தை பார்த்து அவரை திட்டி இப்படி அழாத என சமாதானப்படுத்துகிறான், அதன் பிறகு பரணியின் தோழிகளுக்கு கூல் ட்ரிங்க்ஸ் கொடுக்க அவர்கள் இது யார் என்று கேட்க பரணி கடையில் வேலை செய்பவன் என அவமானப்படுத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.