Vichithra Crying Video: குமுறிய விசித்ரா! இதுவும் கடந்து போகும்.. ஆறுதல் கூறிய பிக்பாஸ்! வைரலாகும் வீடியோ!

By manimegalai a  |  First Published Nov 16, 2023, 1:55 PM IST

பிக்பாஸ்ஸிடம் விசித்ரா, தன்னை பற்றி மற்ற போட்டியாளர்கள் பேசுவதை கேட்டு மனம் குமுறி அழுத வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 


விசித்ரா அம்மா என கூறி ட்ராமா போடுவதாக, மாயா, பூர்ணிமா போன்ற சிலர் விமர்சனம் செய்த நிலையில், இதற்க்கு விளக்கம் கொடுக்கும் விதமாக, நேற்றைய தினம் தனியாக பேசி விசித்ரா... இனி தன்னை யாராவது மரியாதை இல்லாமல் பேசினால், தன்னுடைய மைக்கை கழட்டி கொடுத்து விட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு சென்று விடுவேன் என்றும், என்னை விசித்ரா மேம் என கூப்பிடுங்கள் என அனைவருக்கும் கட்டளை போட்டார்.

இதை தொடர்ந்து மாயா அவரை கட்டி பிடித்து சமாதானம் செய்த நிலையில், மீண்டும் இந்த பிரச்சனை இன்றும் புகைவதை பார்க்க முடிகிறது. தொடர்ந்து இதை நினைத்து அழுது கொண்டிருக்கும் விசித்ராவை அழைத்து பிக்பாஸ் பேசுகிறார். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

இருட்டில் லிப் லாக்... பாத்ரூமில் கொஞ்சல்! எனக்கு மாயா பற்றி முதலே தெரியும்! ஷாக் கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்

நீங்கள் மீண்டும் பிக்பாஸ் விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் என கூறுகிறார் பிக்பாஸ். இதற்க்கு விசித்ரா ஓகே என சொல்கிறார். நேற்று ஒரு கெட்ட நாள், ஆனால் இன்று புது நாள்... புது முயற்சி. இந்த நிகழ்ச்சியுடைய சாராம்சமே ஒரு குழுவாக சேர்ந்து விளையாடுவது தான். அதை நீங்கள் செய்கிறீர்கள். அதனால் தான் உங்களை என்னால் புஷ் பண்ண முடியுது. இது அனைத்தும் கடந்து வந்தால் தான் நீங்கள் மற்றவர்களை விட சிறந்தவர்களாக தெரிவீர்கள் என்கிறார்.

இதற்க்கு விசித்ரா, என்னால் முடிந்தவரை ஒவ்வொரு நாளும் சிறந்தவராக இருக்க நினைக்கிறன். ஆனால் என்னுடைய சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன். அனைவர் மீதும் அன்பு காட்டுகிறேன். அதே நேரத்தில் என்னை ஒரு காது கேளாதரவர் போலும், மூளை இல்லாதவர் போலும் நினைத்தால் அதனை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜெயாவுக்கும் , விசித்ராவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என சொல்கிறார்.

SJ Suryah: நடிகரானதும் கோடிகளில் சம்பளம் வாங்கும்.. முரட்டு சிங்கிள் எஸ்.ஜே.சூர்யா Net Worth எவ்வளவு தெரியுமா?

இதை தொடர்ந்து பேசும் பிக்பாஸ், நீங்கள் எங்கெல்லாம் உங்களின் பெஸ்ட்டை கொடுக்கவில்லையோ அங்கெல்லாம் நான் இருக்கேன் என சொல்கிறார், இதற்க்கு நன்றி சொல்லும் விசித்ரா நான் டவுன் ஆனால் நீங்கள் என்னை புஷ் பண்ணுங்க என கோரிக்கை வைக்கிறார். இதற்க்கு பிக்பாஸ் அதற்க்கு தானே நான் இருக்கேன். அது தான் என் வேலை என கூறுகிறார். மேலும் இதுவும் கடந்து போகும் என ஆறுதல் சொல்ல... விசித்ராவும் தன்னுடைய விளக்கத்தை கொடுக்கிறார். இந்த வீடியோ மூலம் எந்த அளவுக்கு விசித்ரா மிகவும் நோகடிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது.

talking to BB about the Mom and Mam issue & crying. 🥲 (3/4)

BB give the motivation to and asking her to focus on the title. 👏👌 pic.twitter.com/jOSZgikIB7

— Vakugu (@vakugu)

 

click me!