சூடாமணியை சந்தித்த வைகுண்டம்.. வெளிவரும் பகீர் உண்மைகள்! அண்ணா சீரியலின் பரபரப்பான தருணம்!

By manimegalai a  |  First Published Nov 15, 2023, 9:14 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 
 


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வைகுண்டம் சண்முகத்தை பின் தொடர்ந்து ஜெயிலுக்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சூடாமணியை பார்க்க வேண்டும் என வைகுண்டம் தெரிஞ்ச மனுவில் ஒரே ஒரு பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பதாக சண்முகம் சொல்கிறான். பிறகு எனக்கு பதிலாக என்னுடைய அப்பாவை அனுப்புங்க என்று சொல்லி கேட்க போலீஸ் ஜெய்லர் அதுக்கு ஒத்துக்க மாட்டாங்க என மறுப்பு தெரிவிக்கின்றனர். 

Tap to resize

Latest Videos

Rajinikanth: ஷிகர் தவனுடன் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார்! வைரலாகும் புகைப்படம்! 

பிறகு ஜெயிலர் அம்மா வெளியே வர சண்முகம் அவரிடம் விஷயத்தை சொல்லி கெஞ்ச அவர் இருவரையும் பார்க்க அனுமதி கொடுக்கிறார். முதலில் சண்முகத்தை மட்டுமே பார்த்து வெளியே வரும் சூடாமணி பிறகு வைகுண்டத்தை பார்த்து சந்தோஷப்படுகிறார். 

இருவரும் நீண்ட நாள் பிரிவில் தொடர்ந்து சந்தித்துக் கொள்வதால் பாசத்தை பரிமாறிக் கொள்கின்றனர். அதன் பிறகு சண்முகம் மற்றும் வைகுண்டம் இந்த சௌந்தரபாண்டியை சும்மா விட மாட்டேன் என கோபம் கொள்ள சூடாமணி வைகுண்டம் தன்னை வந்து பார்த்து திட்டு வாங்கிக் கொண்டு சென்றதைப் பற்றி சொல்கிறாள். 

என் அண்ணன் குடியால சாகல! நடந்தது இது தான்... 10 வருஷத்துக்கு பின் நடிகர் மணிவண்ணன் தங்கை கூறிய ஷாக் தகவல்!

அதோடு வைகுண்டம் ஜெயிலுக்கு வந்ததற்கான காரணத்தை கேட்க சூடாமணி முழுவதுமாக சொல்லாமல் சௌந்தரபாண்டி தான் காரணம் என்பதை மட்டும் உடைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

click me!