ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் கேரளா செல்வதாக சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது சண்முகம் வெளியே கிளம்புவதை பார்த்த வெட்டுக்கிளி எங்கே என்று விசாரிக்க கேரளா வரை சென்று வருவதாக சொல்ல வைகுண்டம் சூடாமணியை பார்க்க போவதாக நினைத்து சண்முகத்துடன் செல்ல முடிவெடுக்கிறார்.
ஆனால் சண்முகம் கீழக்கரை வரை சென்று வருவதாக சமாளித்து அங்கிருந்து கிளம்ப வைகுண்டம் நீ கேரளா தான் போற எனக்கு தெரியும் நானும் வரேன் என்று சொல்ல சண்முகம் இல்லை என மறுத்துவிட்டு கிளம்பிச் செல்ல வைகுண்டம் அவனுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து சொல்கிறார்.
வீட்டில் ரத்னாவும் பரணியின் வெங்கடேசை சந்திக்க கிளம்புகின்றனர். மறுபக்கம் வெங்கடேஷ் குடும்பத்தோடு ஊரை விட்டு கிளம்ப வழியில் இவர்கள் சந்தித்து விடுவார்களா என பில்டப் எகிற கடைசியில் சந்திக்காமல் வெங்கடேஷ் வீட்டிற்கு வந்து பார்க்க அவர்கள் சொந்த ஊருக்கு சென்று இருப்பதாக அக்கம் பக்கத்தில் உள்ள சரி திரும்பி வந்துருவாங்க என நினைத்து இவர்களும் வீடு திரும்புகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இங்கே சண்முகம் ஜெயிலுக்கு வந்து சூடாமணியை பார்க்க மனு கொடுத்துவிட்டு திரும்ப அங்கு வைகுண்டம் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். வைகுண்டம் நான் உன் அம்மாவ பார்க்கணும்டா அவள பாத்து 20 வருஷம் ஆயிடுச்சு என கெஞ்சுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.