பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ் மற்றும் கேப்டன் மாயாவால் வஞ்சிக்கப்பட்ட ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்களிடம் கமல் அவர்களின் குறையை கேட்டு தெரிந்து கொள்ளும் புரோமோ வெளியாகியுள்ளது.
ஸ்மால் போஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட போட்டியாளரான விசித்ராவிடம், கமல் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா என கேட்க, அவர் பிரதீப்பை நீங்கள் ரெட் கார்டு கொடுத்து அனுப்பிடீங்க சார், இந்த வாரம் முழுக்க எங்களுக்கு அது போல் ஒரு பிரச்சனை இருந்துச்சு. ஆண்களை மட்டும் கேட்கும் நீங்கள், பெண்களை மட்டும் அப்படியே விட்டு விடுவீர்களா என கேட்கிறார். அதற்க்கு கமல் இல்ல... இல்ல.. ரெட் கார்டு நெறைய இருக்கு, அதற்க்கு பஞ்சமே இல்லை என தெரிவித்தார்.
அவர் இப்படி பேசும் போது, மாயா, பூர்ணிமா, ஜோவிகா ஆகியோர் பேய் அறைந்தது போல் அமர்ந்திருந்தனர். தொடர்ந்து பேசும் விசித்ரா, அப்போ என்னை மரியாதை இல்லாமல் நடத்தியதற்கு மன்னிப்பு இல்லையா சார் என கேட்கிறார். அவங்க சாரி எல்லாம் நீங்க நம்புறீங்களா என கேட்கும் கமல் நான் நம்பவில்லை ஏன் என கேட்குறீங்களா? படம் போடுங்க என சொல்கிறார்.
ஏற்கனவே வெளியான இரண்டாவது புரோவில் கூட நீங்கள் வைத்த குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை என்றால் இது எப்படி நடந்தது என கேள்வி எழுப்பி குறும்படம் போட சொன்னார். அதே போல் அதிகாரம் உங்கள் கையில் இருக்கும் போது நீங்கள் என்ன செய்தீர்கள் என கேள்வி கேட்டு, மறந்துடீங்கனு நினைக்கிறன் என சொல்லி அதற்கும் ஒரு குறும்படம் போட சொன்னார். சிவப்பு மஞ்சளாக தெரிந்திருக்கிறது என்றால் உங்களுக்கு மாலை கண் நோயா? குடுக்க மாட்டேன் என சொல்லி இருக்கலாமே அது உங்கள் முடிவு தானே என கேள்வி கேட்டது மட்டும் இன்றி, நீங்கள் உங்களோடு என்னையும் பிளேயராக சேர்த்து கொண்டது போல் தோன்றுகிறது என வெளுத்து வாங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகபட்சமாக இதுவரை இரண்டு குறும்படம் போடுவதே பெரிய விஷயம், ஆனால் புல்லி கேங்கை இன்று, பல குறும்படம் போட்டு டம்மி கேங் ஆக்கவேண்டும் என்கிற தீர்மானத்துடன் அகம் டிவி வழியே பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார் கமல். இதனால் அடுத்த வாரம், புல்லி கேங் கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமாக நல்ல பிள்ளை போல் இருக்கும் என தெரிகிறது.