Bigg Boss Promo: இது தீர்வு.. தீர்ப்பு அல்ல! முதல் புரோமோவிலேயே இன்றைய சம்பவத்தை உறுதி செய்த கமல்ஹாசன்!

By manimegalai a  |  First Published Nov 11, 2023, 2:46 PM IST

பிரதீப் வெளியேற்றப்பட்டதற்கு எதிராக பலர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில், இன்றைய முதல் புரோமோவிலேயே பிக்பாஸ் வீட்டில் வெயிட்டான சம்பவம் நடக்க உள்ளதை கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார்.
 


'பிக்பாஸ் சீசன் 7' நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்க்கு முக்கிய காரணம், பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் காரசாரமான சண்டைகள் என்றாலும், மற்றொருபுறம் தப்பு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த வாரம், போட்டியாளர்கள் சிலர் பிரதீப் மீது வைத்த அவதூறான குற்றச்சாட்டால், மிகவும் ஸ்ட்ராங் கண்டெஸ்ட்டாக பார்க்கப்பட்ட பிரதீபுக்கு கமல்ஹாசன் ரெட் கார்டு வழங்கினார். மேலும் கமல் பெரும்பாலும் அரசியல் நோக்கத்திலேயே பேசியதாலும்... தன்னுடைய முடிவை மேனேஜ்மேண்ட் ஏற்று கொண்டது என்பது போல் பேசியதால் கமல்ஹாசன் தான் பிரதீப்பை வெளியே அனுப்ப முக்கிய காரணமா? என்று பலர் கேள்வி எழுப்பினர்.

Tap to resize

Latest Videos

டார் டாராக கிழிந்த துணியை மேல சுருட்டிய போல் உடை! ஆடை பட அமலா பாலுக்கு டஃப் கொடுக்கும் காவ்யா அறிவுமணி!

ஒரு பக்கம் பிக்பாஸ் போட்டியாளர்களின் குற்றச்சாட்டுக்கு குறும்படம் போட்டு பதிலடி கொடுத்த பிரதீப்பின் ரசிகர்கள், கமல் தீர விசாரிக்காமல் இப்படி ஒரு முடிவை எடுத்ததாகவும் குற்றம்சாட்டி வந்தனர். எனவே இந்த வாரம் கமல் தன் மீதான தவறை ஒப்புக்கொள்வாரா? அல்லது தன்னுடைய தீர்ப்புக்கு நியாயம் சொல்லும் விதத்தில் பேசுவாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அந்த வகையில் தன்னுடைய முதல் புரோமோவில் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது, "தீர விசாரித்ததாலேயே வந்த தீர்வு இது... இது தீர்ப்பு அல்ல. குற்றம் செய்தவர்கள் அதற்கான விளைவுகளை அனுபவித்தே ஆகவேண்டும். உலக நியதி!! குற்றம்சாட்டியவர்கள் யோக்கியமா? இந்த கேள்விக்கு அவர்கள் நடத்தை பதில் சொல்லும். அதற்கான விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள். இன்று இரவு என முதல் புரோமோவில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!