பூர்ணிமா - மாயா இருவரும் ஆபாசமாக பேசி கொள்ளும் வீடியோ ஒன்றை வெளியிட்ட நீங்க பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுறீங்களா என பிரதீப் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
பிரதீப் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது கூட, அவருக்கு கிடைக்காத ஆதரவு வெளியேறிய பின்னர் அவருக்கு கிடைத்து வருகிறது. அதற்க்கு முக்கிய காரணம் மாயா, பூர்ணிமா, ரவீனா, நிக்சன் போன்ற பலர்... பிரதீப் மீது வைத்த அபாண்டமான குற்றச்சாட்டு தான். பிரதீப் ஆண்டனி கூல் சுரேஷை மிகவும் கோபமாக தாக்கி பேசியதற்கு போர் கொடி தூக்க போவதாக கூறி, கடைசியில் பிரதீப் மீது வேறுவிதமான பிரச்னையை பிரதிபலிக்க செய்தனர். கமல்ஹாசனும் இந்த குற்றச்சாட்டுகளை தீர விசாரிக்காமல் பிரதீப்பை வெளியே அனுப்பினார்.
இதனால் கடந்த ஒரு வாரமாகவே கமல் மற்றும் மாயாவின் புல்லி கேங்குக்கு எதிராக பலர் தங்களின் விமர்சனங்களையும், கருத்துகளையும் தெரிவித்து வரும் நிலையில்.. இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியுள்ள பூர்ணிமாவை வெளியேற்றும் நோக்கத்துடன், அவருக்கு அதிகம் வாக்களிக்காமல் அவரை வெளியேற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
Chandra Mohan : திரையுலகில் மீளமுடியாத சோகம்! பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் மாரடைப்பால் காலமானார்!
அதே போல் ஐஷுவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரின் பெற்றோர்... ஐஷுவை வீட்டுக்கு அனுப்பி விடும்படி ஒரு கோரிக்கை வைத்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிக்கு இது அப்பாற்பட்டது என்பதால், பிக்பாஸ் தனிப்பட்ட முறையில் என்ன முடிவு செய்வார் என்பது தெரியவில்லை. ஒரே வேலை ஐஷு பெற்றோரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் அவரும் வீட்டுக்கு அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம், மாயா தன்னுடைய உள்ளாடையை நிக்சன் மாஸ்க் கேட்ட போது எடுத்து காட்டிய பற்றி தினேஷ் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் கண்டார். மாயாவும் பூர்ணிமாவும் இதனை ஒரு காமெடி என கூறினாலும், நிக்சன் நான் இதனை பார்த்திருந்தால், கண்டிப்பாக அதற்க்கு எதிராக கேள்வி எழுப்பி இருப்பேன் என கூறியதை வைத்து பிராவோ தினேஷ் பக்கம் தீர்ப்பு வழங்கினார்.
இந்த சம்பவம் குறித்து மாயா மற்றும் பூர்ணிமா கிண்டலாக ஆபாச கமெண்ட் போட்டு பேசி கொண்டிருக்கின்றனர். பூர்ணிமா, நீக்க டச் பண்ணது என்னோட டிக்கிய டிக்னிட்டியை இல்ல என சொல்ல இதற்க்கு மாயா, பல்லை காட்டி இளிக்கிறார். இந்த வீடியோவை எடுத்து போட்டு, பிரதீப்பின் ரசிகர்கள் பலர் நீங்க இப்படி பேசலாம், ஆனால் பிரதீப் பேசுனா மட்டும் தப்பா? என இருவரையும் கமெண்ட் மேல் கமெண்ட் போட்டு வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
- Neenga touch pannathu en dicky a, dignity a illa.. - Women safety officer laughs 🥲🥲
Ivanga pesuna athu joke uuu pesuna athu women safety issue 😡🤬🤬😡
pic.twitter.com/kXLbneXJ8J