7ஜி ரெயின்போ காலனி படத்தில்.. ஹீரோயினாக நடிக்கும் த்ரிஷாவின் அண்ணன் மகள்! அட இவங்களா? செம்ம சாய்ஸ்!
7ஜி ரெயின்போ காலனி படத்தில், ஹீரோயினாக நடிக்க உள்ள நடிகை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம், '7ஜி ரெயின்போ காலனி'. உன்னதமான காதல் கதையான இப்படத்தில், ரவி கிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த நிலையில், சோனியா அகர்வால் ஹீரோயினா நடித்திருந்தார்.
இந்த படம் இவர்கள் இருவரின் திரையுலக வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதே போல் யுவன் ஷங்கர் ராஜா இசையில், அதே போல் 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இப்படம் வெளியாகி சுமார் 19 வருடங்கள் ஆகும் நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க செல்வராகவன் முடிவு செய்துள்ளார். 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தில், ரவி கிருஷ்ணாவே நாயகனாக நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக, த்ரிஷாவின் அண்ணன் மகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது த்ரிஷாவின் சொந்த அண்ணன் மகள் இல்லை. ராங்கி படத்தில், த்ரிஷாவுக்கு அண்ணன் மகள் கதாபாத்திரத்தில் நடித்த அனஸ்வர ராஜன் தான் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D