லியோ படத்திற்காக அனிருத் இசையில் விஜய் பாடிய நா ரெடி பாடல் அஜித் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் கவுதம் மேனன், மிஷ்கின், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், பிக்பாஸ் பிரபலம் ஜனனி, மலையாள நடிகை பிரியா ஆனந்த், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
லலித் குமார் தயாரித்துள்ள லியோ படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து முதல் பாடல் நேற்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. இப்பாடலை நடிகர் விஜய் தான் பாடி இருந்தார். ரசிகர்களை கவரும் விதமாக செம்ம மாஸ் பாடலாக அமைந்துள்ள இது கேட்டவுடன் ரசிகர்களுக்கு பிடித்துப் போகும் வகையில் அமைந்திருந்தது. வழக்கமாக விஜய் போன்ற பெரிய நடிகர்களின் பாடல் வெளியானால் அது எந்த பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.
இதையும் படியுங்கள்... Watch: 2000 நடன கலைஞர்களுடன் தளபதியின் தரமான சம்பவம்! வெளியான 'நா ரெடி' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்! வீடியோ
அந்த வகையில் விஜய் பாடிய நா ரெடி பாடல் பல்வேறு பாடல்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டு உள்ளதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அஜித் நடித்த திருப்பதி படத்தில் இடம்பெறும் திருப்பதி வந்தா திருப்பம் பாடலின் டியூனும், நா ரெடி பாடலின் டியூனும் ஒன்றாக இருப்பதாக ஒப்பிட்டு, அனிருத் அஜித் பாடலை காப்பி அடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஐயா, இது நம்ப தல பாட்டு copy மாறி இருக்கு.....
எனக்கு மட்டும் தான் இப்படி தோனுதா? இல்ல உங்களுக்கும் அப்படி தான் தோனுதா nu comment பண்ணுங்க மக்களே..... pic.twitter.com/kNjYaT2bhK
இது ஒருபுறம் இருக்க, அனிருத் இதற்கு முன் இசையமைத்த டான் படத்தின் ஜல புல ஜங்கு, மாரி படத்தின் தர லோக்கல் சாங், மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் ஆகியவற்றின் டியூன்களும், நா ரெடி பாடலின் டியூனும் ஒன்றாக இருப்பதாகவும் சிலர் ஒப்பிட்டு வருகின்றனர். இப்படி அனிருத் இசையில் வெளியான பாடல் காப்பி சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறையல்ல, இதற்கு முன் பலமுறை இவ்வாறு ட்ரோல் செய்யப்பட்டாலும், அப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வேறலெவல் ஹிட்டாகிவிடும். அந்த வரிசையில் நா ரெடி பாடலும் நிச்சயம் இடம்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதையும் படியுங்கள்... வெறித்தனம்... வெறித்தனம்.. தாரை தப்பட்டைகள் கிழிய தளபதி குரலில் வெளியான 'நா ரெடி' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்!