
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் இளைய தளபதி விஜய் இவரின் 49-வது பிறந்தநாள் விழாவானது தமிழக மட்டுமில்லாமல், இந்தியாவில் உள்ள அவரது ரசிகர்கள் விமர்சியாக இன்று கொண்டாடப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தமிழகத்தில் 10 மற்றும் 12 வகுப்புகளில் முதல் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு விஜய் பரிசு மற்றும் காசோலை வழங்கி மாணவ மாணவிகளை கௌரவித்தார்.
அந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடம் கல்வி பற்றியும் வாக்குரிமை பற்றியும் எதிர்காலத்தை பற்றியும் மாணவ- மாணவிகளுக்கு எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். அப்போது விஜய் பேசுகையில் அசுரன் படத்தில் வரும் வசனம் மேற்கோள் காட்டி "காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, பணம் இருந்தா புடிங்க்கிடுவாணுவ ஆன படிப்பு மட்டும் நம்ம கிட்ட இருந்து யாரும் எடுத்துக்க முடியாது என அசுரன் படத்தில் தனுஷ் பேசிய வசனத்தை பேசியது வரவேற்பை பெற்றது.
தளபதியின் இந்த வார்த்தையை போற்றும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள சு.ஒகையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவ -மாணவிகளுக்கு கல்வி மகத்துவத்தை புரிந்து கொள்வதற்கும்,கிராம பகுதியில் படிக்கும் மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் விஜயின் 49 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டும் விஜய் ரசிகர்கள் மாணவ செல்வங்களுக்கு நோட்டு,பேனா மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் கல்வியின் மகத்துவத்தை புரிந்து அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு நோட்டு,பேனா வழங்கிய விஜய் ரசிகர்கள் செய்த செயல் அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.