கல்வி விருது விழாவில் நடிகர் விஜய் வழங்கிய பரிசுத் தொகுப்பில் என்னென்ன பொருள்கள் இருந்தன என்பதை இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாவது ஆண்டாக கல்வி விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த விருது விழா, இந்த ஆண்டு இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதில் கடந்த ஜூன் 28-ந் தேதி நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் விஜய்.
இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக கல்வி விருது விழா நடைபெற்று வருகிறது. அதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் வரவேற்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கி வருகிறார் விஜய். மேடையில் விஜய்யிடம் பரிசு வாங்கிய மாணவ, மாணவிகள் நம்முடைய ஏசியநெட் தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... நீட் தேர்வில் உள்ள 3 பிரச்சனைகள்? இதற்க்கு நிரந்தர தீர்வு இது மட்டுமே! மேடையில் மாஸ் காட்டிய தளபதி விஜய்!
அப்போது விஜய் மேடையில் கொடுக்கும் பரிசுத் தொகுப்பில் என்னென்ன இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர். அதன்படி அதில் ஒரு சான்றிதழ், பேங்க் செக், சால்வை, மேடையில் விஜய்யுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் உடனுக்குடன் பிரிண்ட் போடப்பட்டு அவர்களிடம் வழங்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி விஜய்யிடம் பரிசு பெற்ற 10ம் வகுப்பு மாணவி ஒருவர், தளபதி இதுபோன்று பரிசு வழங்குவது ஊக்கம் அளிப்பதாகவும், 12ம் வகுப்பிலும் இதுபோன்று நல்ல மதிப்பெண் பெற்று மீண்டும் விஜய் அண்ணாவிடம் பரிசு வாங்குவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அந்த மாணவியின் பெற்றோரும் விஜய்யின் இந்த முன்னெடுப்பை பாராட்டி உள்ளதோடு, தங்கள் ஓட்டு விஜய்க்கு தான் என உறுதியாக கூறி இருக்கின்றனர். அவர்கள் பேசியதை இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... இதை பற்றி பேசியே ஆகணும்! நீட் தேர்வால் ஏற்ப்படும் பிரச்சனைக்கு... இது மட்டுமே தீர்வு! தளபதி விஜய் அதிரடி!