- Home
- Gallery
- நீட் தேர்வில் உள்ள 3 பிரச்சனைகள்? இதற்க்கு நிரந்தர தீர்வு இது மட்டுமே! மேடையில் மாஸ் காட்டிய தளபதி விஜய்!
நீட் தேர்வில் உள்ள 3 பிரச்சனைகள்? இதற்க்கு நிரந்தர தீர்வு இது மட்டுமே! மேடையில் மாஸ் காட்டிய தளபதி விஜய்!
கடந்த 28-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த, கல்வி விருது விழாவில் நீட் தேர்வு குறித்து பேசாமல் இருந்த விஜய், இரண்டாம் கட்ட நிகழ்ச்சியில் நீட் தேர்வு குறித்து தன்னுடைய அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் கடந்த ஆண்டு தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அதிகார்பூரமாக அறிவித்ததை தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையும் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் தன்னுடைய அரசியல் பணிகளை துவங்குவதற்கு முன்பாகவே, தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.
அதன்படி கடந்த ஆண்டு விஜயின் கல்வி விருது விழா, சிறப்பாக நடந்து முடிந்ததை தொடர்ந்து, இந்த ஆண்டு இரண்டு கட்டமாக 'கல்வி விருது விழா'வை நடத்த தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே ஜூலை 28ஆம் தேதி முதல் கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசுகள், ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
6 நாட்களில்... 'ஜெயிலர்' படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை தும்சம் செய்த பிரபாஸின் 'கல்கி 2898 AD' !
இதைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக, தற்போது திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா திருமண மண்டபத்தில் 19 மாவட்டத்தை சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசு, ஊக்கத்தொகை, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. மாணவர்களும் மிகுந்த உச்சாகத்துடன் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் அவர்களின் போக்குவரத்து வசதி, உணவு, போன்ற அனைத்து பணிகளையும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் துரிதமாக செயல்பட்டு செய்துள்ளனர்.
கடந்த 28-ஆம் தேதி மாணவர்கள் முன்பு பேசிய விஜய், நீட் தேர்வு குறித்து வாய் திறக்கவில்லை என விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து... தற்போது தன்னுடைய கருத்தை அதிரடியாக மேடையில் பதிவு செய்துள்ளார். நீட் தேர்வின் பிரச்சனை மற்றும் அதற்கான தீர்வு குறித்து பேசிய தளபதி விஜய்...
"மூன்று பிரச்னைகளை நீட்-ல் பார்க்கிறேன். முதலாவது நீட் மாநில உரிமைகளுக்கு எதிரானது. இரண்டாவது ஒரே நாடு ஒரே பாட திட்டம் ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்திற்கே எதிரானது. Diversity is the strength thats is not a weakness State syllabusல படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வு வைத்தால் எப்படி? மூன்றாவது நீட் தேர்வு குளருபடிகளால் நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை மக்களிடம் இல்லை. இதற்கு தீர்வு நீட் விலக்கு மட்டுமே. தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இதற்கு நிரந்தர தீர்வாக மாநில பட்டியலில் கல்வி மற்றும் சுகாதாரத்துறையை கொண்டு வர வேண்டும். என தளபதி விஜய் கூறியுள்ளார்.