சென்னை மாவட்டம் திருவான்மியூர் ராமச்சந்திரா கான்வென்சன் சென்டரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் இரண்டாம் கட்டமாக இன்று நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாவது கட்டம் இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள தவெக தலைவர் விஜய் அதிகாலையே விழா நடக்கும் இடத்திற்கு வந்து பார்வையிட்டு சென்றார். நடிகர் விஜய் கடந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தொகுதி வாரியாக கல்வி உதவித்தொகை வழங்கினார்.
விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றினார் விஜய். கடந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தொகுதி வாரியாக உதவித்தொகை வழங்கினார். அதனைப்போலவே இந்த கொடுத்து வருகிறார். தமிழ்நாட்டின் 234 மாவட்டங்களிலும் 10, 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல்கட்டமாக சென்னையில் நடத்தப்பட்டது.
undefined
இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசிய விசியங்கள் அனைத்தும் ட்ரெண்ட் ஆகியது என்றே கூறலாம். ஆனால் கடந்த முறை இருந்த அரசியல் எதிர்ப்பு போன்றவை இந்த முறை விஜயிடம் இல்லையோ என்ற கேள்வி எழுந்தது. தற்போது இந்த குற்றச்சாட்டை எல்லாம் பொய்யாக்கும் விதமாக ஒன்றியம், நீட் தேர்வு எதிர்ப்பு என சகல பிரச்சனைகளையும் பற்றி பேசி உள்ளார். கல்வி விருது வழங்கும் விழாவில் முதலாவதாக செங்கல்பட்டு மாணவி சுபிக்ஷாவுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார் நடிகர் விஜய்.
பிறகு பேசிய நடிகர் விஜய், “நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன். ஒன்றிய அரசு கால தாமதம் செய்யக்கூடாது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு கோரும் தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். சிறப்பு பொதுப் பட்டியலை உருவாக்கி கல்வி மற்றும் பொருளாதாரத்தை அதில் சேர்க்க வேண்டும். ஜாலியாக படியுங்கள் stress எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டாம். வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்” என்று ஒன்றிய அரசு முதல் மாநில திமுக அரசு வரை பேசி உள்ளார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய் கடந்த வாரம் நடைபெற்ற கல்வி விருது விழாவில் இப்போது மட்டும் தான் பேசுவேன். அடுத்த முறை பேசமாட்டேன் என்று கூறியிருந்தார் விஜய். ஆனால் அவர் பொதுவாக பேசிவிட்டு சென்றுவிட்டார். 28ஆம் தேதி நடந்த விழாவில் நீட் குறித்து விஜய் பேசவில்லை என்று விமர்சனம் எழுந்த நிலையில் இன்று பதில் அளித்து இருக்கிறார். அதுமட்டுமின்றி கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான விசில் போடு போஸ்டரில் மைக் சின்னம் இருந்தது. அது விஜய் மறைமுகமாக நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக வெளியிட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது. தவெகவுக்கும், நாதகவுக்கும் இடையே மறைமுக பேச்சுவார்த்தை இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய்யின் இந்த அரசியல் பேச்சு கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.