- Home
- Gallery
- Education Award: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 'கல்வி விருது 2.0' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய் வருகை!
Education Award: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 'கல்வி விருது 2.0' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய் வருகை!
'தளபதி' விஜய், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடத்தும் கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ள நிலையில், தளபதி விஜய் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay
32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய நடிப்பாலும், அன்பாலும் கட்டி போட்டிருக்கும் 'தளபதி' விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கினார்.
Thalapathy Vijay
கட்சியை துவங்கும் முன் பல்லாண்டுகளாக இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அதன் மூலம் பல நற்பணிகள் செய்து வந்தார். இந்த ஆண்டு கட்சியை துவங்குவதற்கு அடித்தளம் அமைப்பது போல், கடந்த ஆண்டு ஜுன் 17-ஆம் தேதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாக சான்றிதழும் ஊக்கத் தொகையும் அளித்து உத்வேகப்படுத்தினார்.
இந்த ஆண்டும் தமிழக வெற்றி கழக கட்சித் தலைவராக மீண்டும், கல்வி விருது வழங்க உள்ளதாக அறிவித்தார். அதன்படி முதல் கட்டமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொகுதிகள் வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, அவர்களது பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தக்கையும் வழங்கி கௌரவித்தார். கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல்கட்ட கல்வி விருது விழா முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட நிகழிச்சி இன்று நடைபெற உள்ளது.
திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா திருமண மண்டபத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மண்டபத்திற்கு அதிகாலையே விஜய் வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 'கல்வி விருது 2.0 நிகழ்ச்சியில், 19 மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்குகிறார் விஜய். 725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. இதற்காக பேருந்துகள் மூலம் த.வெ.க நிர்வாகிகள் பெற்றோர் மற்றும் மாணவர்களை பத்திரமாக அழைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.