ரப்பர் போல வளையும் உடம்பு... சமந்தாவின் வெற லெவல் பிட்னஸ்... வைரலாகும் ஓர்க்அவுட் வீடியோ!

Published : Jul 02, 2024, 09:18 PM ISTUpdated : Jul 02, 2024, 09:20 PM IST
ரப்பர் போல வளையும் உடம்பு... சமந்தாவின் வெற லெவல் பிட்னஸ்... வைரலாகும் ஓர்க்அவுட் வீடியோ!

சுருக்கம்

சமந்தா நாள் முழுவதும் சமச்சீரான உணவு முறையைப் பின்பற்றுவதுடன் தொடர்ச்சியாக உடற்பயிற்சியையும் செய்துவருவதால் பளபளப்பான சருமத்தையும் உடல் அமைப்பையும் எப்போதும் அழகாகப் பராமரித்து வருகிறார்.

திரையுலகில் ஜொலிக்கும் நடிகைகள் பலர் உடல் எடையில் அக்கறையுடன் கட்டுக்கோப்பாக பராமரிக்கிறார்கள். தோற்றத்தை வசீகரமாக வைத்துக்கொள்ள பிரத்யேக உடற்பயிற்சிகளைச் செய்வது, டயட் முறைகளைப் பின்பற்றுவது போன்றவற்றை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் நடிகை சமந்தா தனது நடிப்பிலும் ஃபிட்டாக இருப்பதிலும் அனைவரையும் கவர்ந்துள்ளார். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் தன்னுடைய டயட் மற்றும் உடற்பயிற்சியை தீவிரமாக பின்பற்றுபவர் சமந்தா. இது அவரது தோற்றம் கவர்ச்சியாக இருப்பதற்கு முக்கியமான காரணம்.

இந்நிலையில், சமந்தா இப்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் வீடியோவில் அவர் உடலை வில்லாக வளைத்து ஒர்க் அவுட் செய்யும் காட்சியைப் பார்த்து அவரது ரசிகர்கள் அசத்து போயிருக்கிறார்கள். பல ரசிகர்கள் அவரது தொடர்ச்சியான பிட்னஸ் பற்றி பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.

மக்களே... ஏசி வாங்க இதுதான் சரியான நேரம்! 1 டன் ஏசிக்கு ஏகப்பட்ட ஆஃபர் வழங்கும் பிளிப்கார்ட்!

தினசரி உடற்பயிற்சி செய்யும் சமந்தா, குறிப்பாக கார்டியோ பயிற்சியில் ஈடுபடுவார். டயட்டைப் பொறுத்துவரை,விருப்பம் போல அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறார். பழங்கள், பருப்பு வகைகள், ஓட்ஸ் ஆகிய அடங்கிய சத்தான உணவை காலையில் உட்கொள்கிறார். வைட்டமின் சத்துகள் நிறைந்த ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்ட உணவுகளையும் நார்ச்சத்து அதிகம் உள்ள பண்டங்களையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்கிறார்.

சமந்தா நாள் முழுவதும் சமச்சீரான உணவு முறையைப் பின்பற்றுவதுடன் தொடர்ச்சியாக உடற்பயிற்சியையும் செய்துவருவதால் பளபளப்பான சருமத்தையும் உடல் அமைப்பையும் எப்போதும் அழகாகப் பராமரித்து வருகிறார்.

பிஎஸ்என்எல் வழங்கும் டக்கரான பிளான்! ஜியோ, ஏர்டெல் எல்லாம் இப்ப என்ன செய்ய போறாங்க?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ
தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை