துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்த கருடன் திரைப்படம் ஒரே நேரத்தில் மூன்று ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக கலக்கி வந்தவர் சூரி. அவரை கடந்தாண்டு ரிலீஸ் ஆன விடுதலை படம் மூலம் முதன்முதலில் ஹீரோவாக நடிக்க வைத்தார் வெற்றிமாறன். சூரியின் இயல்பான நடிப்பு அப்படத்துக்கு பலமாக அமைந்து வெற்றிவாகை சூட உதவியது. விடுதலை படத்துக்கு பின்னர் சூரிக்கு தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
அப்படி அவர் ஹீரோவாக நடித்த இரண்டாவது திரைப்படம் தான் கருடன். இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார். இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், எதிர்நீச்சல், கொடி போன்ற மாஸ் ஹிட் படங்களை இயக்கியவர் ஆவார். கருடன் திரைப்படத்தில் சூரியுடன் சசிகுமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இதையும் படியுங்கள்... வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்ய உள்ள நிக்கோலாயின் முன்னாள் மனைவி கவிதா யார்? விவாகரத்து காரணம் என்ன?
கருடன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த மே மாதம் 31ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்ததோடு நடிகர் சூரியின் மிரட்டலான நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன. இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
திரையரங்கில் அமோக வரவேற்பை பெற்ற கருடன் திரைப்படம் தற்போது ஓடிடிக்கு வருகிறது. அப்படம் வருகிற ஜூலை 3-ந் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுவும் அமேசான் பிரைம், சிம்ப்ளி சவுத், டெண்ட் கொட்டா ஆகிய மூன்று ஓடிடி தளங்களில் கருடன் திரைப்படம் வெளியாக உள்ளது. தியேட்டரைப்போல் இப்படத்திற்கு ஓடிடியிலும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Video: ரெளடி பேபியாக மாறிய ராதிகா... வரலட்சுமியின் திருமண விழாவில் மனைவியுடன் சரத்குமார் ஆடிய வேறலெவல் டான்ஸ்