பிக்பாஸ் ராஜூக்கு அடித்த ஜாக்பார்ட்! 'பன் பட்டர் ஜாம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம்!

Published : Jul 02, 2024, 12:45 PM IST
பிக்பாஸ் ராஜூக்கு அடித்த ஜாக்பார்ட்! 'பன் பட்டர் ஜாம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம்!

சுருக்கம்

Gem Z தலைமுறையின் கதை சொல்லும், "பன் பட்டர் ஜாம்" படத்தின் மூலம் பிக்பாஸ் ராஜூ கதாநாயகனாக அறிமுகமாக உள்ள தகவலை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.  

Rain Of Arrows Entertainment சார்பில், சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில் உருவாக உள்ள படம் 'பன் பட்டர் ஜாம்'. ‘எண்ணித்துணிக’ படத்தை அடுத்து  தன்னுடைய இரண்டாவது படமாக இப்படத்தை தயாரிக்கிறார்.

ராஜூ நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்குகிறார்.  இவர் ஏற்கனவே
‘சைஸ் ஜீரோ’ படத்திற்கு வசனமும், தேசியவிருது வென்ற ‘பாரம்’ படத்தில்  திரைக்கதை மற்றும் வசனமும் எழுதி இருக்கிறார்.   ‘காலங்களில் அவள் வசந்தம்’ படம் மூலம் இயக்குநராக  அறிமுகமான இவர் இயக்கும் இரண்டாவது படம் இது.

கொளுத்தும் வெயிலில்... மனசாட்சியே இல்லாமல் விரட்டினார் அமலா பால்..! மேக்கப் கலைஞர் பகிர்ந்த ஷாக் தகவல்!

பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆதியா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா நடிப்பில் இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகி வரும் திரைப்படம் ”பன் பட்டர் ஜாம்”. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இறந்தகால வலிகளின் சுமைகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயங்களுக்கும் நடுவே ஊசலாடாமல், நிதானமாக நின்று நிகழ்காலத்தை புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் Gen Z இளைஞர்களைப் பற்றிய கதைதான் பன் பட்டர் ஜாம்.  ஒருவனை சுற்றி எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அந்தந்த கணத்தை முழுமையாக வாழப் பழகினால், கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை என்கிற பாசிட்டிவிவான கருத்தை பரபரப்பாகவும், முழுக்க முழுக்க நகைச்சுவை ததும்பச் சொல்லும் வகையிலும், இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. 

காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் விஜயகுமார் - காவியா திருமண வரவேற்பு! ஏராளமான பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பீல் குட் ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை ராகவ் மிர்தாத் உருவாக்கியுள்ளார். முக்கியமாக சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஜோடி அதகளப்படுத்தியுள்ளார்கள். அதேபோல் சார்லியின் கதாப்பாத்திரம் அவரின் அடுத்த மைல் கல்லாக இப்படம் இருக்கும். இவர்களுடன் மைக்கேல் தங்கதுரை மற்றும்  V.J பப்பு முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.  வரும் ஜூலை 8 ஆம் தேதி இப்படத்தின் முதல் பார்வை வெளி வருகிறது. ராகவ் மிர்தாத் எழுதி இயக்கம் இந்த படத்திற்கு, நிவாஸ் கே பிரசன்ன இசையமைக்கிறார். பாபு குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜான் ஆபிரஹாம் படத்தொகுப்பு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிரிஷை ஏன்டி கடத்த சொன்ன... விஜயாவை பொழந்துகட்டிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம சம்பவம்
நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!