Varalaxmi : ராகுல் இவ்ளோ சூப்பரா டான்ஸ் ஆடுவாரா? அக்கா வரலட்சுமி கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட தம்பி! Video!

Ansgar R |  
Published : Jul 02, 2024, 08:16 PM IST
Varalaxmi : ராகுல் இவ்ளோ சூப்பரா டான்ஸ் ஆடுவாரா? அக்கா வரலட்சுமி கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட தம்பி! Video!

சுருக்கம்

Varalaxmi Brother : பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் விரைவில் நிக்கோலை சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். திருமணத்திற்கு முன்னதாக கொண்டாட்டங்கள் இப்பொது துவங்கியுள்ளது.

கடந்த 1988ம் ஆண்டு தமிழில் வெளியான "கண்சிமிட்டும் நேரம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் சரத்குமார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் திரைத்துறையில் பயணித்து வருகிறார். அரசியல் தலைவராகவும் தற்பொழுது விளங்கிவரும் சரத்குமார் இறுதியாக தமிழில் இந்த 2024 ஆம் ஆண்டு வெளியான "ஹிட் லிஸ்ட்" என்ற படத்தில் நடித்திருந்தார். 

தொடர்ச்சியாக அவர் பல மொழிகளில் நல்ல பல படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சரத்குமார் அவர்களுடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்த குழந்தை தான் பிரபல தமிழ் திரையுலக நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழ் திரை உலகில் "போடா போடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார் வரலட்சுமி சரத்குமார். 

Actress Sobhita : ஒரு கையில் தயிர் சாதம்.. ஒரு கையில் பூ - சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சோபிதா துளிபாலா!

இப்பொழுது அதிக அளவில் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் வரலட்சுமிக்கு வயது 39. இன்னும் சில தினங்களில் அவருக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில், அவருடைய திருமணத்திற்கு முன்னதான கொண்டாட்டங்கள் தற்பொழுது தொடங்கி இருக்கிறது. நிக்கோலை சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ள வரலட்சுமி சரத்குமாரின் சங்கீத் நிகழ்வு இன்று நடந்துள்ளது.

இதில் அவருடைய தம்பியும், சரத்குமார் ராதிகாவின் மகனுமான ராகுல் பங்கேற்று நடனமாடிய வீடியோ ஒன்று தற்பொழுது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

வரலட்சுமி சரத்குமார் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்கு மனைவியுடன் வந்து வாழ்த்திய சூப்பர் ஸ்டார்! வைரலாகும் போட்டோஸ்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே ஒரு போன் கால் சாமி மாதிரி வந்து காப்பாற்றிய கார்த்திக்!
பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?