யோகி பாபு செய்த பரிகாரம் என்ன? வைத்தீஸ்வரன் கோயிலில் பக்தி பரவசமாக பிரார்த்தனை!

By SG Balan  |  First Published Jul 2, 2024, 11:01 PM IST

மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்ட யோகி பாபு வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்றுள்ளார். அவர் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.


நடிப்பில் மட்டுமில்லாமல் கடவுள் நம்பிக்கையிலும் தீவிரமான ஈடுபாடு கொண் யோகி பாபு, செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

தமிழில் விஜய், அஜித், ரஜினி, சூர்யா அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகர் யோகிபாபு. காமெடியனாக அறிமுகமானாலும் பல வெற்றிப் படங்களுக்குப் பிறகு ஹீரோவாகவும் நடக்கத் தொடங்கி இருக்கிறார்.

Tap to resize

Latest Videos

undefined

யோகி பாபு நடித்த படங்கள் வெற்றி பெறுவதால் தொடர்ந்து பல வாய்ப்புகளும் அவரைத் தேடி வருகின்றன. அண்மையில், இவரது நடிப்பில் வெளியான பொம்மை நாயகி படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பாலிவுட்டில் ஷாருக்கான், டோலிவுட்டில் பிரபாஸ் படங்களில் நடித்து, அங்கும் தன் திறமைக்காக பாராட்டு பெற்றுள்ளார். ஹீரோவாக வாய்ப்பு கிடைத்தால், காமெடியனாக நடிக்கும் வாய்ப்புகளையும் கைகழுவாமல் இரண்டு விதமாகவும் நடிக்கிறார். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட நடிப்பைக் கொடுத்து அப்ளாஸ் அள்ளிக்கொண்டிருக்கிறார்.

மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்ட யோகி பாபு சமூக வலைத்தளத்தில் முருகன் பற்றிய பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமியை தரிசனம் செய்த அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சகல மரியாதையும் கொடுக்கப்பட்டது. சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. வீடியோவில் அவரது பக்தி பரவசமான தோற்றத்தைப் பார்த்து ரசிகர்களும் அவரைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருந்தாலும் யோகிபாபு தன்னுடைய பக்தியை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார் என்று ஆன்மிக ரசிகர்கள் பெருமைப்படுகிறார்கள். உங்கள் திறமைக்கும் உழைப்புக்கும் கடவுள் உங்களுக்கு எல்லா நலனையும் கொடுப்பார் என்று யோகிபாபுவுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறிவருகிறார்கள்.

click me!