4DX திரையரங்கில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் என பெருமையை பெரும் 'இந்தியன் 2'! லைகா வெளியிட்ட தகவல்!

Published : Jul 11, 2024, 04:27 PM IST
4DX திரையரங்கில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் என பெருமையை பெரும் 'இந்தியன் 2'! லைகா வெளியிட்ட தகவல்!

சுருக்கம்

நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள, 'இந்தியன் 2' திரைப்படம் 4DX தொழில்நுட்பம் கொண்ட திரையரங்கில் சவுதி அரேபியாவில் வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.  

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில், சேனாதிபதியாக நடித்திருந்த கமல்ஹாசனுக்கு ஜோடியாக சுகன்யாவும், மகனாக நடித்திருந்த கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், நெடுமுடி வேனு, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இன்றி தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் திரைப்படமாக உள்ளது.

எனவே இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இணைந்து 'இந்தியன் 2' படத்தில் மீண்டும் இணைய உள்ளதாக அறிவித்தனர். அதன்படி இப்படத்தின் அறிவிப்பு, 2017-ம் ஆண்டு பிக்பாஸ் மேடையில் அறிவிக்கப்பட்டது. ஆனால்  2019-ம் ஆண்டு இப்படம் தொடங்கப்பட்டது. இடையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் விழுந்து 3 பேர் மரணம், கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட மேக்கப் அலர்ஜி, கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட தாமதம் என பல சிக்கல்கள் இருந்தது.

Anna Serial: பரோலில் வெளியே வந்த சூடாமணி.. பாண்டியம்மாவுக்கு விழுந்த அறை - அண்ணா சீரியல் அப்டேட்!

இரண்டு வருடம் வரை இப்படத்திற்காக காத்திருந்த ஷங்கர் ... திடீர் என தெலுங்கில் நடிகர் ராம் சரணை வைத்து படம் எடுக்க சென்றார். ஆனால் விடாப்பிடியாக லைகா நிறுவனம் நீதிமன்றம் வரை சென்று இயக்குனர் ஷங்கரை மீண்டும் 'இந்தியன் 2' படத்தை கையில் எடுக்க வைத்தது. ஒருவழியாக இப்படத்தின் 2-ஆம் பாகத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து, நாளை (ஜூலை 12)-ம் தேதி 'இந்தியன் 2' படம் திரையரங்குகளில் வர தயாராக உள்ளது.

இந்த படத்தில், நடிகர் சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், விவேக்,மனோ பாலா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக 'இந்தியன் 2' உள்ளது. படம் ரிலீசாக இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்று தீர்ந்துள்ளது.

தீபாவுக்குள் புகுந்த சக்தி.. பேரரில் உருட்டி விடப்பட்ட ரம்யா, அடுத்து நடந்தது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட் !

உலகம் முழுவதும் வெளியாக உள்ள 'இந்தியன் 2' திரைப்படம், 4DX திரையரங்கில் வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில், "சவுதி அரேபியாவில் Indian2 திரைப்படம் 4DX இல் வெளியாகும் முதல் இந்தியத் திரைப்படம் என்றும்  அதன் சிலிர்ப்பை உணருங்கள் உணர இப்போதே முன்பதிவு செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Dhanoosh Nepoleon: அட இவங்க தான் நெப்போலியன் மருமகளா? தேவதை மாதிரி இருக்காங்க.. வைரலாகும் நிச்சயதார்த்த வீடியோ

4DX திரையரங்கம் 3டி தொழில்நுட்பத்தை விட அட்வான்ஸ் என சொல்லலாம். திரைப்படங்களை இடம்பெறும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம்மை அசைய வைப்பது, உணர வைப்பது போன்றவை இந்த திரையரங்குகளின் சிறப்பு என கூறலாம். உதாரணத்திற்கு படத்தில் கப்பலில் சென்றாலோ அல்லது குதிரை மேல் சென்றாலோ நீங்களும் அந்த நகர்வை அனுபவிக்க முடியும். அதே போல் மின்னல், பனி விழுவது, சில துளி தண்ணீர் விழுவதையும் அனுபவிக்க முடியும். இப்படி பட்ட திரையரங்கில் களமிறங்கி கமல் தெறிக்க விடுவதை பார்க்க பல ரசிகர்கள் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?