- Home
- Gallery
- Soodamani Release: பரோலில் வெளியே வந்த சூடாமணி; பாண்டியம்மாவுக்கு விழுந்த அறை - அண்ணா சீரியல் அப்டேட்!
Soodamani Release: பரோலில் வெளியே வந்த சூடாமணி; பாண்டியம்மாவுக்கு விழுந்த அறை - அண்ணா சீரியல் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சூடாமணி ஜெயிலர் அம்மாவிடம் பரோல் கேட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது ஜெயிலர் அம்மா முதல் முறையாக நீங்க பரோல் கேட்டு இருக்கீங்க, ரிஸ்க் எடுத்து நான் பரோல் கொடுக்கறேன். உங்க கூட எந்த போலீசையும் நான் அனுப்பல.. நீங்களே பரோல் முடிந்ததும் ஜெயிலுக்கு வந்துடனும் என்று சொல்ல சூடாமணி சம்மதம் சொல்கிறாள்.
மறுபக்கம் சிவபாலன் பரணியின் சர்டிபிகேட்டை கொண்டு வந்து கொடுக்க ஷண்முகம் என் தங்கைகளுக்கான நான் என்ன வேணா பண்ணுவேன் என்று சொல்ல திருந்தாத உன்னோட என்னால் இருக்க முடியாது நான் அமெரிக்கா போறேன் என்று பரணி சொல்கிறாள். இதையடுத்து ஷண்முகம் நீ உன் விருப்பப்படி போ, ஆனால் நீ போகுற வரைக்கும் இந்த விஷயம் வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்ல பரணி சரி என்று சம்மதிக்கிறாள்.
Anna Serial
அதையடுத்து முதல் முறையாக சூடாமணி கலர் புடையில் தயாராகி வெளியே வர ரெடியாக பாண்டியம்மா அவளை பார்த்து என்னடி கலர் புடவையில் எங்க கிளம்பிட்ட.. நீ வெளியே போனால் என் தம்பி உன்னை உயிரோட விட மாட்டான்.. உன்னால் ஒன்னும் செய்ய முடியாது என்று சொல்ல பளாரென பாண்டியம்மாவை அறையும் சூடாமணி நான் உத்தமினு நிரூபிக்க என் புள்ள இருக்கான் என்று சொல்லி வெளியே வருகிறாள்.
அடுத்து முகத்தை மறைத்து கொண்டு திருச்செந்தூர் வந்து சேரும் சூடாமணி பழைய நினைவுகளை நினைத்து பார்க்கிறாள். முருகன் கோவிலையும் அங்கு பரணி ஷண்முகம் சேர்ந்து இருக்கும் பேனரையும் பார்த்து சந்தோசப்படுகிறாள். அடுத்து வீட்டிற்கு வந்து பார்க்க வீடு பூட்டி இருப்பதை பார்க்கிறாள்.
கனி வெளியே வந்ததும் அவளை பார்த்த சூடாமணி நீ கனி தானே என்று கேட்க கனி வந்திருப்பது கன்னியாகுமரி காருங்க என்று நினைத்து ஓடி போய் கதவை சாற்றி கொள்ள சந்தோசத்துடன் வந்த சூடாமணி வருத்தம் அடைகிறாள். அடுத்து கனி இந்த விஷயத்தை ரத்னாவிடம் சொல்ல ரத்னா பரணியிடம் சொல்ல பரணி அந்த தகவலை சண்முகத்துக்கு சொல்கிறாள். நான்கு பேரும் புதுசா வந்திருப்பது யார் என்று தெரியாமல் குழப்பமடைகின்றனர், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.