
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். முதலில் வில்லனாக அறிமுகமான அவர் பின்னர் ஹீரோவாகவும் கலக்கினார். சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, கிழக்கு சீமையிலே உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார்.
கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நெப்போலியன் திமுகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய அமைச்சர் என பல பொறுபுகளை வகித்துள்ளார். நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இதில் 4 வயது இருக்கும் போதே தனுஷிற்கு அரிய வகை தசை சிதைவு நோய் ஏற்படவே, அவருக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்கா சென்ற அவர் ஒருக்கட்டத்தில் மகனின் உடல்நலனை கருத்தில் கொண்டு அமெரிக்காவிலே செட்டிலாகிவிட்டார். அங்கு சொந்தமாக பிசினஸ் செய்து வரும் அவர் இயற்கை விவசாயத்தையும் மேற்கொண்டு வருகிறார்.
25 வயதாகும் தனது மகன் தனுஷிற்கு திருமணம் செய்ய நெப்போலியன் ஏற்பாடு செய்து வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், தற்போது நெப்போலியன் மகன் தனுஷின் நிச்சயதார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. உடல்நிலை பிரச்சனை காரணமாக தனுஷ் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் அவருக்கு வீடியோ காலில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
தனுஷ் வர முடியாவிட்டாலும் நெப்போலியன் தனது குடும்பத்தினருடன் இந்தியா வந்து நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் அக்ஷயாவை தான் நெப்போலியன் தனது மகனுக்கு நிச்சயம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.