
பல வருடங்களாகவே, விஜய், அஜித், கமல், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் அன்று சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் ரசிகர்கள் மூலம் சில அசம்பாவிதங்கள் நேர்ந்து அது ரசிகர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிவதால், கடந்த 3 வருடங்களாக தமிழக அரசு, சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.
குறிப்பாக 5 மணிக்கு, 6 மணிக்கு துவங்கப்படும் சிறப்பு காட்சிகளுக்கு தடை விதித்த தமிழக அரசு 9 மணி காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கிறது. இந்நிலையில் நாளை வெளியான உள்ள 'இந்தியன் 2' படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழக்க வேண்டும் என, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், நாளை ஒரு நாள் மட்டும் 5 காட்சிகளை திரையிட்டுக்கொள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.